கருவுற்ற பெண்களுக்கு உதவும் ஜனனி சிசு சுரக்ஷா திட்டம் !

பிறக்கும் குழந்தைகளின் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க பெரும் பணம் செலவிடுவதற்குச் சிரமப்படும் பெற்றோரின் துயரத்தைக் குறைப்பதற்காக மத்திய சுகாதார-குடும்பநல அமைச்சகம் இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது. கருவுற்ற பெண்களுக்கும், பிறந்து 30 நாள் வரையுள்ள சிசுக்களுக்கும் அவை சுகப்பிரசவத்தில் அல்லது அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) பிறந்திருந்தாலும் எவ்வித கட்டணமும் இல்லாத இலவச மருத்துவச் சிகிச்சை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. கிராமப்பகுதிகளிலும் நகர்ப்பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் இந்தத்திட்டம் 2011 ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதியன்று தொடங்கப்பட்டது.

கருவுற்றப் பெண்களுக்கான உதவிகள் இலவசமாகப் பிரசவம் பார்க்கப்படும்
அறுவைசிகிச்சை (சிசேரியன்) தேவையென்றால் அதுவும் இலவசம்.மருந்துகள் மற்றும் தேவையான மருத்துவ சாமான்கள் இலவசம்.மருத்துவமனையில் தங்கியிருக்கின்ற நாட்களுக்கு இலவச உணவு.இரத்தம் தேவையென்றால் கட்டணமின்றி இரத்தம் செலுத்தப்படும்.மருத்துவமனையில் சில வசதிகளைப் பயன்படுத்தக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால் அவை ரத்து செய்யப்படும்.வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வருவதற்கு இலவச வாகனவசதி.மருத்துவமனையிலிருந்து வெளியிடங்களுக்குப் பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டியிருந்தால் அதற்கும் இலவசமான போக்குவரத்து வசதி.மருத்துவமனையில் 48 மணிநேரம் தங்கியிருந்த பின்னர் மீண்டும் வீடு திரும்பவும் இலவச வாகன வசதி..பிறந்து 30 நாள் வரையுள்ள மற்றும் நோயுற்ற சிசுக்களுக்கான உதவிகள் இலவச சிகிச்சை இலவச மருந்துகள் மற்றும் மருந்தப் பொருள்கள்.இலவச பரிசோதனைகள்.இலவச ரத்தம்.பயன்பாட்டுக் கட்டணங்களில் இருந்து விலக்கு.வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு இலவச வாகன வசதி.வெளியிடப் பரிசோதனைக்குச் சென்றுவரவும் இலவச வாகன வசதி.வீடு திரும்புவதற்கும் இலவச வாகன வசதி.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பிரசவிக்கும் தாய்மார்களுக்கும், அந்த குழந்தைகளுக்கும் மட்டும் மேற்சொன்ன அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும். இத்திட்டத்தினால், சுமார் ஒருகோடியே இருபது லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைப் பார்க்கின்ற மற்ற பெண்களும் இனி பிரசவத்தை அரசு மருத்துவமனைகளிலேயே வைத்துக் கொள்ள முன்வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
Tag Clouds

READ MORE ABOUT :