இறந்த காமெடி நடிகர் குடும்பத்துக்கு நிதி, படிப்பு செலவை ஏற்ற ஹீரோக்கள்.. அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் உருக்கம்..

by Chandru, Sep 11, 2020, 18:52 PM IST

கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி. இவர் நேற்று மாரடைப்பில் மரணம் (செப் 10) அடைந்தார். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி. அவரைக் கண்டதும் குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்களுக்கு விஜய் சேதுபதி ஆறுதல் கூறியதுடன், நிதி உதவியும் அளித்தார்.


வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வருத்தம் தெரிவித்தார். வடிவேல் பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த், மகள் சத்யஸ்ரீ ஆகியோரின் கல்விச் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.அது இது எது நிகழ்ச்சியை விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி வந்தபோது, அதில் வரும் சிரிச்சா போச்சு சுற்றில் வடிவேல் பாலாஜி தான் பங்கேற்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.டிவியில் பிரபலமாகி பிறகு சுட்ட பழம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார் வடிவேல் பாலாஜி. வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருந்தார். அவருக்கு வயது 45. பாலாஜி உடலுக்கு நடிகர் சவுந்தர ராஜன் மற்றும் ஏராளமான டிவி நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர்.


More Cinema News

அதிகம் படித்தவை