ஐபிஎல் விளையாடுவதற்காக 8 அணி வீரர்களும் துபாய் கிளம்பிச் சென்றுள்ளனர். துபாய் செல்வதற்கு முன்பாகவும், சென்ற பிறகும் தொடர் கொரோனா பரிசோதனைக்கு வீரர்கள் உள்ளாக்கப்பட்டனர். அப்போது நடந்த அனுபவங்களை டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், ``நாளை காலை கொரோனா பரிசோதனை முடிவு வரும் என ஒவ்வொரு முறையும், அணியின் மேனேஜர் கூறும்போது, எங்களுக்கு மிகுந்த கவலையாக இருந்தது. கொரோனா பரிசோதனை முடிவுக்குக் காத்திருந்தது, பள்ளித் தேர்வு முடிவுக்குக் காத்திருந்ததை போல உணர்ந்தேன்.
துபாயைப் பொறுத்தவரை இந்த சூழ்நிலையில், அறைக்குள்ளே அடைந்து கிடப்பது எளிதான காரியம் அல்ல. வெப்பம் அதிகமாக இருக்கிறது இங்கு. எனினும், ஓட்டல் அறையில் ஏசி இருப்பதால் சமாளித்துக் கொண்டேன். இரண்டு செஷன் பயிற்சிக்குப் பிறகு என்னுடைய வழக்கமான ஆட்டம் திரும்ப வந்திருக்கிறது. இன்னும் சில தினங்களில் முழுமையாகத் திரும்பி விடும். வீரர்களின் பேட்டிங்கின் தீவிரத்தை, நெட் பயிற்சியிலும், களத்திலும் பார்க்கலாம். ஓய்வு நேரம், நாங்கள் கிரிக்கெட்டை எப்படி விரும்புகிறோம் என்பதை ஆழமாக உணர வைத்தது" என்று கூறியுள்ளார்.