முகப்பரு உங்களின் அழகை கெடுக்கிறதா?? கவலை வேண்டாம்!! இந்த பேஸ் மாஸ்க்கை ட்ரை பண்ணி பாருங்க..

how to cure pimples in tamil

by Logeswari, Oct 20, 2020, 19:35 PM IST

இந்த காலத்து பெண்கள், ஆண்கள் என இருவருமே பருக்களால் அவதிப்படுகிறார்கள். இதனால் முகத்தில் எதோ அழகு குறைந்தது போல எண்ணுகிறார்கள். சிலர் பருக்களால் தன்னம்பிக்கை இழந்து வெளியே வர கூட அஞ்சுகிறார்கள். இதை எல்லாம் கட்டுப்படுத்துவதற்கு சூப்பரான தீர்வு உள்ளது. இதனை ஆண்கள் பெண்கள் என இருவருமே இதனை பயன்படுத்தலாம். இதனை யூஸ் பண்ணுவது மூலம் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.. இந்த மாஸ்க் எல்லா வகையான சருமத்திற்கும் உடனடி தீர்வை தேடித்தரும்.. மற்றும் முகம் சுத்தமாகவும் வேற எந்த வித பிரச்சனையும் ஏற்படுத்தாது..

தேவையான பொருள்கள்:-
புதினா இலை -4 ஸ்பூன்
தயிர் -1 ஸ்பூன்
பூண்டு -4 பற்கள்
தேன் -1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு-1 ஸ்பூன்

செய்முறை:-
முதலில் புதினா இலையை நன்றாக தண்ணீரில் அலசி எடுத்து கொள்ளவும். பிறகு மிக்சியில் புதினா இலை, பூண்டு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்ததை ஒரு பௌலில் மாற்றி அதில் தயிர், தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக ஒன்றோடு ஒன்று சேரும் படி கலந்து கொள்ளவும்.

முகத்தில் இருக்கும் பருக்களின் மேல் கலந்த பேஸ்ட்டை தடவி இரவு முழுவதும் உலர விட வேண்டும். இதனை தினமும் இரவு தவறாமல் செய்து வந்தால் பருக்கள் இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும்..

More Aval News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை