பார்லர் தேவையில்லை.. வீட்டிலே ஃப்ரூட் ஃபேஷியல் செய்யலாம்.. முகம் பள பளன்னு மின்ன இதை செய்யுங்கள்..

how to do fruit facial at home

by Logeswari, Oct 23, 2020, 20:37 PM IST

கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெளியே செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். இந்த வேளையில் பெண்கள் பார்லர் செல்வது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.கவலை வேண்டாம்.. ஃபேஷியலை வீட்டிலே செய்யலாம். இதனால் பார்லர் போக அவசியமும் இல்லை. பார்லரில் செய்வது போல வீட்டில் எப்படி ஃப்ரூட் ஃபேஷியல் செய்வதை குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
பப்பாளி ஜூஸ் -3 ஸ்பூன்
அண்ணாச்சி ஜூஸ் -3 ஸ்பூன்
தேன்-1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

செய்முறை:-
முதலில் பப்பாளி பழம், அண்ணாச்சி பழம் ஆகியவை மிக்சியில் அரைத்து ஜூஸ் ஆக எடுத்து கொள்ளவும். முகத்தை வெறும் தண்ணீரில் அலசி நன்றாக துடைத்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பௌலில் பப்பாளி ஜூஸ், அண்ணாச்சி ஜூஸ் ஆகியவை எடுத்து அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கலந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு பக்கம் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். முகத்தை மசாஜ் செய்த பிறகு கொதிக்கும் தண்ணீரில் முகத்தை கிட்டே கொண்டு சென்று ஆவி புடிக்க வேண்டும்..

10 நிமிடம் கழிந்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பள பளன்னு மின்னும்..இதனை வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் உடனடி தீர்வை கண் குளிராக காணலாம்.

More Aval News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை