வயசாகாம எப்பொழுதும் இளமையில் முகம் ஜொலிக்க வேண்டுமா?? அப்போ.. இந்த மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க..

by Logeswari, Oct 27, 2020, 17:26 PM IST

அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது! அதுவும் பெண்களுக்கு சொல்லவா வேணும்.. எப்பொழுதும் தன்னை அழகி படுத்தி கொள்ள மிகுந்த ஆர்வம் உடையவர்கள். தனது மனதுக்கு பிடித்த ஒருவரின் கண்ணுக்கு அழகாக இருப்பதற்கு பெண்கள் பல வித அழகு சாதனை பொருள்களை பயன்படுத்துவார்கள். பெண்கள் சிலருக்கு வயது மிகவும் கம்மியாக இருக்கும்.ஆனால் முகத்தின் தோற்றம் வயது அதிகமானவர் போல் இருக்கும். இதை பல பெண்கள் தங்களது வாழ்க்கையில் உணர்ந்து இருப்பார்கள். அவர்களுக்கு இந்த மாஸ்க் மிகவும் உதவும்.கவலை வேண்டாம் இதனை மிக எளிதாக போக்கி விடலாம். சரி வாங்க இந்த ஃபேஸ் மாஸ்க் எப்படி தயாரிப்பது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
கேரட்- 3
உருளைக்கிழங்கு- 2
பன்னீர்-2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு-1 ஸ்பூன்

செய்முறை:-
முதலில் கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை மிக்சியில் ஒரு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். அரைத்த கலவையை ஒரு பௌலில் மாற்றி கொள்ளவும். பிறகு முகம் பொலிவு பெற முக்கிய பொருளான எலுமிச்சை சாறு மற்றும் பன்னீரை சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.

முகத்தை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு மாஸ்க்கை முகம் முழுவதும் தடவ வேண்டும். எந்த அழகு பொருளை முகத்திற்கு பயன்படுத்தினாலும் கழுத்துக்கும் போட வேண்டும் அப்பொழுது தான் முகம் மற்றும் கழுத்து ஒரே கலரில் இருக்கும். மாஸ்க்கை போட்டதுக்கு பிறகு 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் வெண்மையில் ஜொலிக்கும்.

குறிப்பு:-
இந்த மாஸ்க்கை தினமும் தவறாமல் பயன்படுத்தி வந்தால் உடனடி தீர்வை காணலாம்.இதனை தினமும் யூஸ் பண்ணுவது மூலம் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது..

More Aval News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை