பலாப்பழத்தை கொடுத்து சின்னத்திரை நடிகையை கரெக்ட் செய்த தொழிலதிபர்..!

by Logeswari, Oct 27, 2020, 17:24 PM IST

தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் வந்து கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது குடும்ப கதைக்களம் கொண்டு கூட்டு குடும்பமாகவும் மிகவும் எதார்த்தமாகவும் இருப்பதால் மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதில் முக்கிய கதாபாத்திரமான முல்லை கதிர் ஜோடிகளின் காதல் கெமிஸ்ட்ரி மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. முதலில் முல்லை என்கிற சித்து பல அலைவரிசையில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு நடிப்பில் அவரது திறமையை கண்டு பல சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.

"சரவணன் மீனாட்சி" சீரியலில் கலையரசியாக வந்து தமிழர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வாழ்க்கையில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வந்தார். இவரது உழைப்பு வீணாகாமல் அதற்கு பலனாக பல லட்ச மக்களின் மனதில் முல்லையாக வாழ்ந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கு சமூக வலைத்தளங்களில் தனி ரசிகர்களின் கூட்டமே உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சித்துவுக்கு ஒரு தொழிலதிபர் உடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா காலம் என்பதால் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாகவும் குறைந்த கூட்டத்துடன் நடந்தது. தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று நிகழ்ந்த நிகழ்ச்சியில் சித்துவிற்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வருங்கால கணவர் ஹேம்நாத், மாமனார், மாமியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது சித்து தங்களது காதல் கதையை கூறும் பொழுது பலாப்பழம், ஆப்பிள் போன்ற பழங்கள் மூலமாக தான் எங்கள் காதல் கதவு திறந்தது என்று உணர்ச்சி பொங்க கூறினார். இருவருக்கும் ஒரு சிறிய நலங்கு போல் விமர்சியாக நடத்தினார்கள். இது குறித்து சித்துவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பொருத்தமான ஜோடி, முல்லைக்கு ஏற்ற மாப்பிள்ளை எனவும் சிலர் வாழ்த்துகளும் கூறி வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை