ரெட் ஒயினை பயன்படுத்தி எப்படி பேஷியல் செய்வது?? வாங்க பார்க்கலாம்..

by Logeswari, Jan 7, 2021, 20:22 PM IST

ஒயின் குடித்தால் முகம் பல பல வென்று மின்னும் என்று நிறைய புத்தகத்தில், இணையத்தளத்தில் படித்துள்ளோம். ஆமாங்க உண்மை தான் சிவப்பு ஒயின் குடிப்பதால் முகம் பொலிவடைய செய்யும்.. பெரிய பியூட்டி பார்லர் எல்லாம் இதை தான் பயன்படுத்துகிறார்கள். ரெட் ஒயினை வைத்து எப்படி வீட்டிலே பேஷியல் செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:-
ரெட் ஒயின் -தேவையான அளவு
எலுமிச்சை பழச்சாறு-1 ஸ்பூன்
காபி தூள்-சிறிதளவு
பன்னீர்-2 ஸ்பூன்

செய்யும் முறை:-
முதலில் ரெட் ஒயின், எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து கொள்ளவும். இக்கலவையை பஞ்சினால் தொட்டு முகத்தில் தடவ வேண்டும். நன்கு மசாஜ் செய்த பிறகு முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி கொள்ளவேண்டும்.

அடுத்து ரெட் ஒயின், காபி தூள் போன்றவை சேர்த்து முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரில் கழுவி விட வேண்டும். ரெட் ஒயினுடன் பன்னீரை கலந்து முகத்தில் தடவி 15 -20 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு நீரினால் முகத்தை கழுவினால் முகம் தங்கம் போல் ஜொலிக்கும்...

You'r reading ரெட் ஒயினை பயன்படுத்தி எப்படி பேஷியல் செய்வது?? வாங்க பார்க்கலாம்.. Originally posted on The Subeditor Tamil

More Aval News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை