Wednesday, Jul 28, 2021

பெண்மையைப் போற்றுவோம்....!

நன்மையாக விளங்கிய பெண்மை

by Suresh Dec 2, 2017, 22:24 PM IST

 

பெண்மை...

பெண்மை


இதை வாசிக்கின்ற உள்ளத்திற்கு ஒரு பெண்மை எழுதுகின்ற சில உண்மைகள்:-

பெண் என்பவள் யார்?

எதற்காக பிறப்பிக்கபட்டாள்?

ஆனால் இப்போது அவளின் நிலைமை என்ன?

பெண் என்பவள் மனித இனத்திலிருந்து தோன்றிய ஒரு இனம். உடலாலும் உள்ளத்தாலும் ஆண் இனத்திலிருந்து வேறுபட்டவள்.

எதற்காக.?

பெண் இனம் எதற்காக இறைவனால் பிறப்பிக்கப்பட்டது. ஆண் இனத்தின் தனிமையை போக்க அதே இனத்தின் சரிபாதியாக உருவாக்கப்பட்டாள். இது எல்லா மதத்தினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை.

ஏன் இறைவன் ஆணின் தனிமையைப் போக்க ஒரு ஆணை உருவாக்கவில்லை.?
ஏனென்றால் ஒரே துருவங்கள் (இரு வலிமை) ஒன்றையொன்று விலக்கிக் கொள்ளும் என்பது இறைவனுக்கு தெரியாதா என்ன.? ஆகவே இரு எதிர் துருவங்களான ஆணையும் பெண்ணையும் இணைத்தார்.

இவ்வாறு ஆணோடு இணைந்த பெண் எவ்வாறு தனிமையைப் போக்கினாள்.?

ஆணின் கருத்துக்களுக்கு இணையான அல்லது எதிரான கருத்துக்களை பதிவு செய்வதிலும், உழைப்பதிலும், வீரத்திலும், மற்றும் குடும்பத்தின் எல்லா காரியங்களிலும் சரிபாதியாக நின்று அவனின் கவுரவத்தை நிலைநாட்டினாள்.

எளிமையாக சொல்லப்போனால் ஆணுக்கு ஒரு நன்மையாக மட்டுமே விளங்கினாள்.
இன்றைய நிலை என்ன.?

நன்மையாக விளங்கிய பெண்மை, இன்று ஆண்கள் என்று சொல்லிக்கொண்டு காம மிருகத்துக்கு இச்சையூட்டுகிற பொருளாயிற்று.

நன்மையாக விளங்கிய பெண்மை, இன்று ஆண்களின் அரசியலுக்கு மலிவான பிரச்சாரமாயிற்று.

நன்மையாக விளங்கிய பெண்மை, இன்று ஆண்களின் கார்ப்ரேட் உலகத்தின் விளம்பரங்களாயிற்று.

நன்மையாக விளங்கிய பெண்மை, இன்று ஆண்களின் சினிமா தொழிலுக்கு கேளிக்கையின் உச்சத்தை கொடுப்பதாயிற்று.

நன்மையாக விளங்கிய பெண்மை, இன்று ஆண்களின் சாமியார் தொழிலுக்கு தூபம் போடும் விளையாட்டுப் பொருளாயிற்று.

நன்மையாக விளங்கிய பெண், இன்று குழந்தை குறைபாடு மருத்துவமனையால் மலடியாக சித்தரிக்கப்படுகிறாள்.

நன்மையை மட்டுமே தெரிந்திருந்த பெண்மை, சக பெண்மையான மாமியார், மருமகள், ஏன் தோழி என்னும் உருவத்தில் கூட வில்லியாக மாறிப்போனது.

ஏன் இத்தனை தலைகீழான மாற்றங்கள்.?

பெண்மையே நீ எப்போது விழித்துக்கொள்வாய்.?
உன்னை உயர்வாய் உருவாக்கின இறைவனின் இருதயம் உனக்காய் கொந்தளிப்பதை உணர முடிகிறதா.?

என்று உன் உயர்வை நோக்கிப் பார்க்கின்றாயோ, அன்று உன் விடுதலை, எப்படி இத்தனை அக்கிரமங்களை உன்னை விட்டு ஓட வைப்பது.?

பெண் விடுதலை;-

பெண் விடுதலை என்றவுடன் பெண்மை ஆண்மையிடம் மல்லுக்கட்டி வெளியேறுவது என்பது, பட்டம் படித்த குழந்தைகளின் தவறான கருத்து.

முதலாவது ஒவ்வொரு பெண்மையும், தன்னிடமிருந்த நன்மையைப் பறித்த அரக்கர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

1) நான் பெண் தானே.! என்று அடிமைக்கு வழிகோலும் நினைவை வெளியேற்ற வேண்டும், நானும் இறைவன் உருவாக்கிய மனித இனத்தின் சரிபாதி, எனக்குள்ளும் வீரம், தைரியம் உண்டு என்பதை உணர வேண்டும்.

2) ஆண் இனத்தை வில்லனாக பார்ப்பதை விட்டு, அவன்/அவள் செய்கின்ற அக்கிரமங்களை தட்டிக் கேட்க வேண்டும், அக்கிரமத்திற்கு மட்டுமே வில்லியாக வேண்டும்.

3) தன்னை அலங்கரித்து அல்லது ஆடையைக் குறைத்து, தன்னை காட்சிப் பொருளாக உலகுக்கு காட்டுவதை விட, தன் வாழ்க்கையை மற்றவர்களுக்கு நல்ல ஒரு முன்மாதிரியாக்க வேண்டும் 

4) தன் பெண்மையில் இருக்கும் உயரிய குணங்களான அன்பு, மன்னிப்பு, சந்தோஷம், இரக்கம், மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை  மாமியார், மருமகள், தோழி ஆகியோரிடம் காட்ட வேண்டும்.

குறை கூறுதல், கோபம், பொறாமை, எரிச்சல் (வயிற்றெரிச்சல்), நக்கல்/நையாண்டி போன்றவை விட்டொழிய வேண்டும்.

You'r reading பெண்மையைப் போற்றுவோம்....! Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Aval News

அண்மைய செய்திகள்