90 Hz டிஸ்ப்ளே மற்றும் குவாட் ரியர் காமிராவுடன் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஸோமி மி 10ஐ, ரியல்மீ எக்ஸ்7 மற்றும் மோட்டோ ஜி 5 ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இது சந்தையில் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ32 சிறப்பம்சங்கள்
சிம்: டூயல் நானோ சிம்
தொடுதிரை: 6.4 அங்குலம் எஃப்எச்டி+ சூப்பர் AMOLED
ரெப்ஃரஷ் விகிதம்: 90 Hz; பிரைட்நஸ்: 800 nits
இயக்கவேகம்: 6 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி (1 டிபி வரைக்கும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் கூட்டலாம்)
செல்ஃபி காமிரா: 20 எம்பி ஆற்றல்
குவாட் காமிரா: 64 எம்பி + 8 எம்பி + 5 எம்பி + 5எம்பி (123 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், மேக்ரோ ஷூட்டர், டெப்த் சென்ஸார் கொண்டவை)
பிராசஸர்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; ஒன் யூஐ 3.1
மின்கலம்: 5000 mAh
பாஸ்ட் சார்ஜிங்: 15W
4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், பிராக்ஸிமிட்டி சென்சார், இன் டிஸ்ப்ளே விரல்ரேகை உணரி உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.21,999/- விலைக்குக் கிடைக்கிறது. எச்டிஎஃப்சி வங்கி கிரடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றில் தள்ளுபடி ரூ.2,000/- போக சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனை ரூ.19,999/- என்ற விலைக்கு சாம்சங்.காம் மற்றும் முன்னணி மின்னணு விற்பனை தளங்கள், அங்காடிகளில் வாங்கலாம்.