துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு தடை கோரிய வழக்கு சென்னை முதன்மை அமர்வுக்கு மாற்றம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் இணை இயக்குனர் சக்திநாதன் ஆகியோர் மீது ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணைக்குத் தடை கோரி கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிதணிகைகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார் . அண்ணா பல்கலைக்கழகத்தில் இணை இயக்குனர் சக்தி நாதன் மற்றும் துணைவேந்தர் சூரப்பா ஆகியோர் மீது இணையதளம் மூலமாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ 200 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 13 தொகுதி கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதில் ஒவ்வொரு ஆசிரியர்கள் 13 முதல் 15 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் சூரப்பா மீது உள்ள புகாரை விசாரணை செய்வதற்காக உயர் கல்வித்துறை தலைமைச் செயலர் நவம்பர் 11ஆம் தேதி அரசாணை வெளியிட்டனர்.

இந்த நடவடிக்கை இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் பெயரைக் களங்கப்படுத்துவதாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை செய்ய இடைக்காலத் தடை விதிக்கவும், உயர் கல்வித்துறை தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்து இருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததுதமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறும் போது அண்ணா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் கீழ் வராது. மேலும் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் இதை பொது நல வழக்காக விசாரிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

துணை வேந்தர் சூரப்பா தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில் அண்ணா பல்கலைக்கழகம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இருந்தாலும் அதன் உறுப்பு கல்லூரிகள் பெரும்பாலானவை தென் தமிழகத்திலேயே அமைந்துள்ளது எனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை விசாரிக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது எனக் கூறினார்.இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தன்னை இந்த வழக்கில் சேர்க்கக் கூறியதை நீதிமன்றம் ஏற்கிறது. அவரை இந்த வழக்கில் இரண்டாவது மனுதாரராக நீதிமன்றம் சேர்க்கிறது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கைச் சென்னை முதன்மை அமர்வுக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டனர்.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!

READ MORE ABOUT :