பிரபுதேவாவும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பிரேக் டான்ஸ் சேர்ப்பு

by Nishanth, Dec 9, 2020, 16:48 PM IST

2024ம் ஆண்டு பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பிரேக் டான்சை சேர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் நம்ம ஊரு பிரபுதேவாக்கள் கூட ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளலாம்.கடந்த 2016ம் ஆண்டு 31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. அந்தப் போட்டியில் மொத்தம் 207 நாடுகளைச் சேர்ந்த 11,238 வீரர்கள் கலந்து கொண்டனர். அந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா 46 தங்கம், 37 வெள்ளி மற்றும் 38 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 121 பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பிடித்தது. 27 தங்கப் பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்தையும், 26 தங்கப்பதக்கங்களுடன் சீனா 3வது இடத்தையும் பெற்றது.

இந்நிலையில் 32வது ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் அடுத்த ஆண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 5 விளையாட்டுகளைச் சேர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பேஸ்பால், கராத்தே, ஸ்கேட் போர்டிங், ஸ்போர்ட் கிளைம்பிங் மற்றும் சர்பிங் ஆகிய 5 போட்டிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் 2024ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டியில் புதிதாக பிரேக் டான்சையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியைச் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அளித்துள்ளது. இதன்படி பாரிஸ் ஒலிம்பிக் போட்டி முதல் பிரேக் டான்ஸ் திறமைசாலிகள் கலந்துகொள்ளலாம். நம்ம ஊரு பிரபுதேவாக்களுக்குக் கூட ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரேக்கிங் என்று இந்தப் போட்டிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்து 2018ம் ஆண்டு அர்ஜென்டினா பியூனஸ் ஐரிசில் நடந்த இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் சோதனை அடிப்படையில் பிரேக் டான்ஸ் சேர்க்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பிரபுதேவாவும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பிரேக் டான்ஸ் சேர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை