நிம்மதியான வேலை, அட்வெஞ்சர் - ஹிட் அடிக்கும் கார்த்தியின் `தேவ் டிரைலர்!

`கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு, நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம், `தேவ்.’ இப்படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்க, 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்குப் பிறகு, கார்த்தி - ரகுல்ப்ரீத் சிங் இதில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

அவர்களைத் தவிர, ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், `ஸ்மைல் சேட்டை’ விக்னேஷ்காந்த் போன்றோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆக்‌ஷன் அண்ட் ரொமான்ஸ் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், இமாச்சலப்பிரதேசம், ஐரோப்பிய நாடுகள் என பல்வேறு இடங்களில் நடைபெற்றது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய அன்பறிவு சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளனர். கடைக்குட்டியில் கிராமத்து வேடத்தில் நடித்த கார்த்தி இப்படத்தில் மிகவும் ஸ்டைலிஷான லுக்கில் உள்ளார். மேலும், நிக்கி கல்ராணி கெமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரெய்லரை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் சூர்யா. அதில், ``இளமை துள்ளும், கலர்புல்லான புது மாதிரியான காதல் கதை இது. கார்த்தியின் கதை தேர்வை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று கூறி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :