`எந்த சூழ்நிலையிலும் நான் அதைச் செய்யமாட்டேன்' - விஷமிகளின் செயலால் நொந்துபோன விஜய் சேதுபதி!

குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. பெரிய இடத்துக்கு சென்றாலும் மற்ற நடிகர்கள் பொது பிரச்சனைகளில் ஒதுங்கி நிற்காமல் மக்கள் பிரச்னைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு முதல் தமிழகத்தின் பல மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் கூட சபரிமலை விவகாரத்தில் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி சென்னை காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி செல்போன் திருட்டை கண்டுபிடிக்கும் ``டிஜிகாப்'' என்ற மொபைல் ஆப்பை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அதில், ``காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி, இந்த `டிஜிகாப்' செயலி மூலம் குறையும்" என்று கூறினார். இப்படி கூறியதை பிரபல செய்தி நிறுவனம் போட்டோ கார்டாக வெளியிட்டது. இந்தப் புகைப்படத்தை விஷமிகள் சிலர் போட்டோஷாப் செய்து, அதில், ``பகவத் கீதை ஒன்றும் புனித நூல் கிடையாது. இன்றைய நாட்டின் சீரழிவுக்கு இதுபோன்ற கற்பனை நூல்களே காரணம்" என எடிட் செய்து அதை பரப்பியுள்ளனர். இது வைரலாக பரவ சர்ச்சை ஏற்பட்டது.

இந்த சர்ச்சை குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளார். சர்ச்சைக்கு உள்ளன இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டு அதில், ``‪என் அன்பிற்குரிய மக்களுக்கு‬ ‪பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை‬ பேசவும் மாட்டேன்‬. ‪சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது‬. ‪எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்‬." எனப் பதிவிட்டிருந்தார். இப்பதிவுடன் தான் பேசிய காணொலிக்கான லிங்கையும் பதிவு செய்தார். கூடவே அந்த செய்தி நிறுவனமும் உண்மையான புகைப்படம் எது என்பதை பதிவு செய்துள்ளது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்