நடிகை `ஜாங்கிரி' மதுமிதாவுக்கு நாளை மறுநாள் திருமணம் - உறவினரை கரம்பிடிக்கிறார்!

நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கு நாளை மறுநாள் திருமணம் நடைபெறவுள்ளது.

`ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மதுமிதா. இந்தப் படத்தில் சந்தானத்துக்கு இவர் ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் இவரின் கேரக்டர் பெயரான `ஜாங்கிரி' பிரபலமானதை அடுத்து இவர் `ஜாங்கிரி' மதுமிதா என அறியப்பட்டார். தன்பிறகு `மிரட்டல்', `அட்டக்கத்தி', `கண் பேசும் வார்த்தைகள்' எனப் பல படங்களில் நடித்தாலும், `இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் வந்த பேபி கதாபாத்திரத்தின் மூலம் முக்கிய காமெடி நடிகையாக பெயர் வாங்கினார். தொடர்ந்து சமீபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் அஜித்தன் தங்கையாக நடித்தார்.

இந்நிலையில் மதுமிதா விரைவில் இல்லற வாழ்வில் இணையவுள்ளார். ஆம், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தனது தாய்மாமா மகனும் உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்யவுள்ளார் மதுமிதா. வீட்டு சம்மதத்துடன் திருமணம் நடைபெறுகிறது. கோயம்பேட்டில் உள்ள ஜே.பி. திருமண மண்டபத்தில், காதலர் தினத்தின் மறுநாளான பிப்ரவரி 15ம் தேதி காலை 7.30 மணிக்குத் திருமணம் நடைபெறுகிறது. இவரின் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் நிறைய பேர் கலந்துகொள்ள உள்ளார்கள்.

இல்லற வாழ்வில் இணையும் `ஜாங்கிரி' மதுமிதா நாமும் வாழ்த்துவோம்.....

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News