சென்னையில் ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்வு - நடிகர் அஜித் பங்கேற்பு!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் திதி நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி கலந்துகொண்டனர்.

`விஸ்வாசம்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் தற்போது `தீரன் அதிகாரம்' ஒன்று இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் ஹிட் அடித்த 'பிங்க்' ரீமேக் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மூலமாக வித்யா பாலன் தமிழில் முதல்முறையாக அறிமுகமாகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தமிழில் தயாரிக்கிறார். ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும்போது அவருக்கு ஒரு படம் நடித்து தருவதாக அஜித் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதனடிப்படையில் இந்தப் படத்திலும், இதற்கு அடுத்து ஒரு படத்திலும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கிறார்.

இதற்கிடையே, சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் போனி கபூர், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீதேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். அவருடன் அவரது மனைவி ஷாலினியும் அவரது சகோதரர் ரிச்சர்டும் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொள்வதற்காக அஜித் சீக்கிரமாவே ஸ்ரீதேவி வீட்டுக்கு வர ஷாலினி சிறிது நேரம் தாமதமாக விழாவில் கலந்துகொண்டார். பொதுவாக அஜித் திரை விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால் துக்க நிகழ்வுகள் மற்றும் திருமண விழாக்களில் அஜித் ஒருபோதும் கலந்துகொள்ள தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
More Cinema News
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
mammootty-collaborates-with-director-ram-again
பேரன்பு படத்துக்கு பிறகு மம்மூட்டியுடன் இணையும் இயக்குனர் ராம்...
keerthy-suresh-turns-down-rana-daggubatis-film
கீர்த்தி நடிக்க மறுத்த வேடத்தில் நயன்தாரா.. ராணா தயாரிக்கும் கொரிய மொழிப்படம்..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
international-cricketer-tweets-about-thalapathys-bigil-trailer
விஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..
actress-andreajeremiah-worried-about-film-offer
படங்களை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா திடீர் வருத்தம்..
Tag Clouds

READ MORE ABOUT :