`பேசி தான் பிரிஞ்சோம் இருந்தும் ஏன்னு தெரியல - காதலால் கண்ணீர் வடிக்கும் நடிகை அதிதி மேனன்!

நடிகர் அபி சரவணனுடனான காதல் குறித்து நடிகை அதிதி மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி திரைப்படத்தில் நடித்த அபி சரவணன் மற்றும் நடிகை அதிதி மேனன் ஆகியோர் இணைந்து நடித்தனர். இப்போது அதிதி மேனன் அட்டக்கத்தி தினேஷுடன் களவாணி மாப்பிள்ளை படத்தில் நடித்து இருந்தார். பூர்வீகம் கேரளா என்றாலும்ம் தொடர்ந்து மேலும் சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, பட்டதாரி திரைப்படத்தில் நடித்தபோது அபி சரவணனுடன் அதிதி மேனனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இந்தக் காதல் சில நாட்களிலேயே மனக்கசப்பால் பிரிந்துவிட்டது. அதிதி மேனன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக அபி சரவணன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

அபியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அதிதி இன்று அபி சரவணன் தன் மீது அவதூறு பரப்புவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இருவரும் காதலித்து உண்மை தான். அவரை திருமணம் ஏதும் செய்யவில்லை. காதலிக்கும் போது அபி சரவணனின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் நிறைய கருத்துவேறுபாடுகள் இருந்தது. இதனால் இருவரும் பேசி முடிவெடுத்து தான் பிரிந்தோம்.

ஆனால் ஏன் இப்படி தேவையில்லாமல் பேசி வருகிறார் எனத் தெரியவில்லை. ஆனால் மூன்று மாதமாக என் மீது புகார் கூறிவருகிறார். என்னுடைய சமூக வலைதள கணக்கில் ஊடுருவி எங்கள் இருவருக்கும் திருமணம் ஆனதுபோல் போலி ஆவணங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இது குறித்து புகார் கொடுத்துள்ளேன். இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள்" என்று கூறியுள்ளார்கள். இவர்களின் மோதல் தமிழ் சினிமாவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Cinema News
yogi-b-croons-a-song-in-jayam-ravis-bhoomi
ஜெயம் ரவி படத்தில் மீண்டும் இணையும் யோகி பி டி.இமான் இசையில் புதிய ராப் பாடல்
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
sakshi-agarwal-dubs-for-vishals-action
விஷால் படத்தில் நடிகைக்கு டப்பிங் பேசும் சாக்‌ஷி...
keerthi-jyothika-in-rajini-168th-film
ரஜினி படத்தில் ஜோதிகா, கீர்த்தி...? பிறந்தநாளில் புதிய பட ஷூட்டிங்...
actress-sharadas-debt-was-repaid-by-producer-antony-after-40-years
பழம்பெரும் நடிகை சாரதாவுக்கு சம்பள பாக்கி தந்த தயாரிப்பாளர்.. 40 வருடம் கழித்து நடந்த ருசிகரம்..
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
Advertisement