புல்வாமா தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன்? சந்தேகம் கிளப்பும் மம்தா!

Mamatha raises question why Pulwama terror attack before elections

by Nagaraj, Feb 18, 2019, 19:28 PM IST

மக்களவைத் தேர்தலுக்கு முன் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்று முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் மத்திய அரசு உதாசீனம் செய்ததில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார் மம்தா . தீவிரவாத தாக்குதல் அபாயம் இருப்பதாக கடந்த 8-ந்தேதியே உளவுத்துறை எச்சரித்தும் மத்திய அரசு அலட்சியம் செய்தது ஏன்? என்று கேட்டுள்ள மம்தா, ஒரே நேரத்தில் 78 வாகனங்களில் வீரர்களை அணியாக அழைத்துச் சென்றதையும் கேள்வி கேட்டுள்ளார்.

புல்வாமா சம்பவத்தை காரணம் காட்டி மதக்கலவரத்தை கண்ட பாஜக, ஆர்எஸ்எஸ் சதி செய்வதாகவும், மே.வங்கத்தில் பல இடங்களில் இரவு நேரங்களில் தேசியக் கொடிகளுடன் தேசப்பற்று முழக்கங்களை எழுப்பி பதற்றத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

You'r reading புல்வாமா தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன்? சந்தேகம் கிளப்பும் மம்தா! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை