`அஜித்தை காண்பித்தாலே கொண்டாட்டம் தான் - டுவிட்டரை மீண்டும் தெறிக்கவிடும் `விஸ்வாசம்!

சிவாவுடன் அஜித் இணைந்த நான்காவது படம், 'விஸ்வாசம்'. `வீரம்' படத்தைத் தொடர்ந்து கிராமத்து ஸ்டைலில் மீண்டும் அஜித் நடித்ததால் ரசிகர்கள் படத்தை ஒரு திருவிழாபோல கொண்டாடினர். தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் என்பதால், படம் ரசிகர்களைக் கடந்து ஃபேமிலி ஆடியன்ஸ் வரை ரீச்சாகியது. இதனால் விஸ்வாசம் படத்துக்கு தமிழகத்தில் பெரும் ஆதரவு கிடைத்தது. வெளியாகி ஏழு வாரத்துக்கு மேலாக 110 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

குடும்பம் குடும்பமாய் இந்தப் படத்தை மக்கள் பார்த்தால் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 130 கோடி வசூல் எட்டியுள்ளது என தயாரிப்பளார் சத்யஜோதி தியாகராஜன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுக்கு டபுள் சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் தற்போது இன்னொரு விஷயத்தை செய்துள்ளது சத்யஜோதி நிறுவனம். ஆம், தெலுங்கில் டப்பாகியுள்ளது விஸ்வாசம். இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியானாலும், இன்று இதனை உறுதிப்படுத்தும் வகையில் தெலுங்கு விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் வில்லனாக நடித்துள்ள ஜெகபதி பாபுவே டிரைலரை வெளியிட்டுள்ளார்.

தமிழில் வெளியிடும் போது என்ன வரவேற்பு இருந்ததோ, அதேதான் தெலுங்கிலும் கிடைத்துள்ளது. டிரெய்லர் வெளியான இரண்டு மணி நேரத்தில் 31 ஆயிரம் லைக்குகள், இரண்டு லட்சம் வியூஸ்கள் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. போதைக்குறைக்கு #ViswasamTeluguTrailer என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் டிரெய்லரில் இடம்பெற்ற அதேகாட்சிகள் தான் என்றாலும், எங்களுக்கு அஜித்தை காண்பித்தாலே டிரெய்லர் தான் என்கிற ரீதியில் டுவிட்டரை தெறிக்கவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். படம் வரும் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds