`எனக்கு அப்படி பேசுறது ரொம்ப பிடிக்கும் - நடிகை தமன்னா குஷி!

உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கண்ணே கலைமானே. இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் சீனு ராமசாமியுடன் இரண்டாம் முறையாக இணைந்துள்ளார். முன்னதாக இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு தமிழில் அவர் நடிப்பில் படங்கள் வெளிவந்து நீண்ட காலமாகி இருந்தன. கேஜிஎப் படத்தில் அவர் நடித்திருந்தாலும் அது நேரடி தமிழ் படம் லிஸ்ட்டில் வராது என கிசுகிசுக்கள் வந்தன. இருப்பினும் நீண்ட இடைவெளிக்கு பிறகு கண்ணே கலைமானே படத்தில் தமன்னா நடித்திருந்தாலும், இந்த படம் முழுக்க அவரை சுற்றியே நடக்கும் கதையம்சம் கொண்டது.

இதனால் இந்தப் படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டு வருகிறது. பலர் அவரது நடிப்பை பாராட்டியுள்ளனர். இந்தநிலையில் தமிழ் படத்தில் நடிக்க ஏன் இந்த இடைவெளி என தமன்னாவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``இந்த மாதிரி கிசுகிசு செய்திகள், டுவீட்டுக்கள், வதந்திகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். காரணம் என்னோட கதை முடிந்துவிட்டது இனி இவள் அவ்ளோ தான் என்று யாரவது சொல்லும்போது தான் எனக்கு அதிக உற்சாகம் பிறக்கும்.

இந்த மாதிரி கிசுகிசுக்களைப் பார்க்கும் போது என்னை ஒரு புதுமுக நடிகை போல நினைத்துக்கொள்வேன். அப்போது தான் இன்னும் நிறைய உழைக்க தோணும். இதற்கு முன்பும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. என் கதை முடிந்துவிட்டது, இனி தமன்னா சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் எனக் கூறியபோது தான் எனக்கு பாகுபலி படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்தது. நடிப்பு போதும் அப்படினு நான் நினைக்கும் போதுதான் எனக்கு ஓய்வு. அப்படி நான் நினைக்க வாய்ப்பில்லை. எனக்குள் இருக்கும் நடிகைக்கு எப்போதும் ஓய்வே கிடையாது" எனக் கூறியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?