பாலிவுட்டில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் கீர்த்திசுரேஷ்

Keerthi suresh enters bollywood

by Sakthi, Mar 5, 2019, 17:12 PM IST
குறுகிய காலத்தில் முன்னணி இடத்தைப் பிடிப்பதென்பது நடிகைகளுக்கு சவாலான விஷயம்.  நடிப்புத் திறமையால் முன்னணி இடத்தை எளிதில் தொட்ட கீர்த்தி சுரேஷ், அடுத்த கட்டமாக பாலிவுட்டில் அறிமுகமாக இருகிறார். 
 
கீர்த்தி சுரேஷ்
 
தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர்  கீர்த்திசுரேஷ்.  ரஜினி முருகன், ரெமோ, பைரவா, நடிகையர் திலகம், சர்கார் என பல ஹிட் படங்களில் உச்ச நட்சத்திரங்களுடனும் நடித்துவிட்டார் கீர்த்தி. இப்பொழுது மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மரக்கார் படத்திலும் தெலுங்கில் நரேந்திரநாத் இயக்கத்தில் ஹீரோயின் செண்ட்ரிக் படத்திலும் நடித்துவருகிறார். 
 
அடுத்த கட்டமாக, கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார். பதாய் ஹோ  (Badhaai Ho) படத்தை இயக்கிய அமித் ஷர்மா இயக்கத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கார். படத்தில் லீட் ரோலில் அஜய் தேவ்கன் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. படம் குறித்த முழுமையான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 
 
தமிழில் இருந்து பல நடிகைகள் பாலிவுட்டில் நாயகியாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அனைவருக்குமான வெற்றி வாய்ப்பு என்பது குறைவே. எல்லா நடிகைகளும் பாலிவுட்டில் சோபிக்கவும் இல்லை. தமிழ், தெலுங்கு, மலையாம் என தொட்டதெல்லாம் ஹிட் ரகத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், இந்தியிலும் ஜொலிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். 

You'r reading பாலிவுட்டில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் கீர்த்திசுரேஷ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை