ரஜினியின் அடுத்த படத்தில் இணைந்திருக்கும் யோகி பாபு!

Yogi babu joins rajini movie

by Sakthi, Mar 12, 2019, 16:13 PM IST

நகைச்சுவை நடிகர்களில் இப்போது முன்னணியில் இருக்கும் காமெடி நடிகர்கள் யோகி பாபு. புதிதாக எந்த படம் தொடங்கினாலும் யோகிபாபுவின் பெயர் முதலாக இடம்பெறும்.

காமெடி நடிகர்கள் மட்டுமின்றி, தர்மபிரபு, ஜாம்பி படங்களில் கதாநாயகனாகவும் நடித்துவருகிறார். தவிர, விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்பொழுது மட்டும் 20 படங்கள் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் யோகி, அடுத்த கட்டமாக ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

பொதுவாக ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் இருந்தால் காலையில் ஒரு ஷூட், மாலையில் ஒரு ஷூட், இரவில் என்று எல்லா படங்களின் படப்பிடிப்பிலும் கலந்துகொள்வார். இதனால் எல்லா படங்களிலும் சிக்கல் இல்லாமல் நடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ரஜினியின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதால், இப்போது ஒரு புது சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. ஏனெனில் ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படம் மும்பையில் ஏப்ரல் 10 முதல் துவங்க இருக்கிறது. அப்படத்திற்காக கட்டாயம் மும்பை செல்லவிருக்கிறார் யோகி பாபு. இதனால் அந்த நாட்கள் யோகிபாபுவை வைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கும் மற்ற படங்களுக்கு இப்போ சிக்கல் உருவாகியுள்ளது. சென்னையில் இருந்தால் எப்படியாவது நேரத்தை ஒதுக்கி படப்பிடிப்பில் கலந்துகொள்வார். ஆனால் மும்பை சென்றால் மற்ற எந்த படத்திலும் நடிக்கமுடியாது. ரஜினி கேட்டக்கொண்டதுக்காக ரஜினி 166க்கு யோகி சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால் யோகியை வைத்து படம் எடுக்க இருக்கும் மற்ற இயக்குநர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.

You'r reading ரஜினியின் அடுத்த படத்தில் இணைந்திருக்கும் யோகி பாபு! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை