விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை பாலிவுட் இயக்குநரான அனுராக் கஷ்யப் பாராட்டியுள்ளார்.
ஆரண்ய காண்டம் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா விஜய் சேதுபதியை வைத்து இயக்கி இருக்கும் திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதியோடு சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி இத்திரைப்படத்தில் வித்தியாசமன ரோலில் நடிப்பதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இப்படத்தின் டிரெய்லர், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை பாலிவுட் முன்னணி இயக்குநரான அனுராக் கஷ்யப்புக்குத் திரையிட்டு காட்டியுள்ளனர். அதனைப் பார்த்துவிட்டு, “ ‘சூப்பர் டீலக்ஸ்’ பார்த்தேன். அசந்து போனேன். படத்தில் கொண்டாட நிறைய இருக்கிறது. படத்தைப் பார்த்த பிறகு, இந்தப் படத்தில் என்னால் பங்கு கொள்ள முடியவில்லை என்னும் வருத்தம் பல மடங்கு அதிகரித்துவிட்டது. குமாரராஜா, ஒரு துணிச்சலான இயக்குநர். அவரிடம் நிறைய வித்தைகள் உள்ளன. நீங்கள் யாரும் இப்படி ஒரு படத்தை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அனுராக் கஷ்யப்.
இந்தப் திரைப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாகவும், ரம்யா கிருஷ்ணன் porn நடிகையாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.