வார்னர் பிரதர்ஸின் காட்ஸில்லா படமான ‘காட்ஸில்லா ; கிங் ஆஃப் தி மான்ஸ்டர்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
மிருகங்களை வைத்து எடுக்கப்படும் எந்த படமென்றாலும் ஹாலிவுட்டில் நிச்சயம் ஹிட்டாகும். டைனோசர், கிங்காங், சுறா, அனகோண்டா என அல்ட்ரா லார்ஞ் மிருகங்களை வைத்து எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் என்றே சொல்லவேண்டும். உருவத்தில் பெரிய அளவிலான அனைத்து மிருகங்களை வைத்தும் பல வெரைட்டிகளில் படங்களையும் எடுத்து தள்ளிவிட்டனர் ஹாலிவுட் இயக்குநர்கள். இந்நிலையில் மற்றுமொரு அனிமல் மூவி ‘காட்ஸில்லா. இதுவரை காட்ஸில்லா சீரிஸில் 34 படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் 35வது கட்ஸில்லா படம் தான் ‘காட்ஸில்லா ; கிங் ஆஃப் தி மான்ஸ்டர்’. இப்படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இது மான்ஸ்டர் வெர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது சீரிஸ். அதென்ன மான்ஸ்டர் வெர்ஸ்? லெஜெண்ட்ரி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படங்களே மான்ஸ்டர் வெர்ஸ் திரைப்படங்கள்.
கடந்த 2014ல காட்ஸில்லா திரைப்படத்தை மான்ஸ்டர் வெர்ஸ் தயாரிச்சிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் சிக்குவலாக தான், காட்ஸில்லா கிங் ஆஃப் தி மான்ஸ்டர் திரைப்படம் உருவாகியிருக்கிறது. மைக்கேல் இயக்கியிருக்கும் இந்தப் படம் 3டியில் வருகிற மே 31ல் வெளியாக இருப்பது கூடுதல் தகவல். டானுக்கெல்லாம் டான் என்பது போல மான்ஸ்டருக்கெல்லாம் மான்ஸ்டர் இந்த காட்ஸில்லா என்கிற மோடில் படத்தை புரமோட் செய்து கொண்டிருக்கிறது தயாரிப்பு தரப்பு.
Teaser Link : https://goo.gl/xAWUyb