வெள்ளித்திரையில் ஹீரோயினாக கால்பதிக்கும் வாணி போஜன்.. ஹீரோ யார் தெரியுமா

by Sakthi, Mar 22, 2019, 17:09 PM IST
சின்னத்திரையில் பிரபலமான வாணி போஜன், வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார். 
 
வாணி போஜன்
 
 
விஜய் டிவியில் வெளியான ‘ஆஹா’ சீரியல் நினைவிருக்கிறதா? அதில் அறிமுகமானவரே வாணி போஜன். பிறகு ஜெயா தொலைக்காட்சியில் ‘மாயா’, சன் டிவியில் ‘தெய்வமகள்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார் வாணி போஜன். எல்லா தொலைக்காட்சியிலும் சீரியல் நடித்துவிட்டதால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. சினிமா ஆசையில் வரும் பலரும் சின்னத்திரையில் தான் முதலில் தஞ்சம் புகுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் திரைத்துறையில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார் வாணி போஜன். 
 
ஜெய் நடிப்பில் சருகண்டி படத்தை தயாரித்த நடிகர் நிதின் சத்யா, அடுத்ததாக, வைபவை வைத்து ஒரு படத்தை தயாரித்துவருகிறார். இந்தப் படத்தில் தான் நாயகியாக அறிமுகமாகிறார் வாணி போஜன்.  சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படத்தை சார்லஸ் இயக்குகிறார். 
 
முன்னதாக, வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். இவரும் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடிகையாகவும், புதிய தலைமுறை டிவியில் செய்திவாசிப்பாளராகவும், விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து, பின்னர் திரைத்துறையில் அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து வாணி போஜன் வெள்ளித்திரையில் தடம் பதிக்கவிருக்கிறார். 


More Cinema News