முன்னணி நடிகையை இரண்டாவது திருமணம் செய்யும் இயக்குநர் விஜய்

அஜித்தின் கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் விஜய், இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

இயக்குநர் விஜய்

விக்ரம் நடிப்பில் தாண்டவம், தெய்வத்திருமகள், ஆர்யா நடித்த மதராசபட்டினம், ஜெயம்ரவி நடித்த வனமகன், சைவம், தேவி, தியா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய். தற்பொழுது சாய் பல்லவி நடிக்கும் கரு, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் மற்றும் ஜெயலலிதா பயோபிக் உள்ளிட்டவற்றை இயக்கியும் வருகிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இயக்குநர் விஜய். அதுவும் பெற்றோர்கள் சம்மதத்துடன் இத்திருமணம் நடந்தது. பிறகு, இரண்டு வருடங்களில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்துவிட்டனர். பின்னர் இருவரும் பரஸ்பரம் பேசி, 2017 ஆம் ஆண்டு பிப்ரவரியில் விவாகரத்தும் செய்து கொண்டனர். இந்நிலையில் இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக சொல்லப்படுகிறது.

சாய் பல்லவி

இந்த முறையும் முன்னணி நடிகை ஒருவரையே திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் இயக்குநர் விஜய். அந்த நடிகை சாய் பல்லவி. தற்பொழுது இயக்குநர் விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. அப்படத்தின் போது இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட, அது காதலாகி, திருமணம் வரை வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. விரைவில் திருமணச் செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
More Cinema News
raghava-lawrence-meets-kamal-haasan-after-darbar-audio-function
கமல் போஸ்டரில் சாணி அடித்த நடிகர்.. கமலுடன் திடீர் சந்திப்பு..
aishwarya-lekshmi-learns-to-drive-a-boat-for-mani-ratnams
படகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..
kamalhaasans-papanasam-to-be-remade-in-chinese
சீன மொழியில்  ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா?
vijay-sethupathis-story-on-farmers
கடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..
archana-kalpathis-announcement-on-50th-day-of-bigil
பிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..
kajal-aggarwal-to-marry-a-businessman-soon
காஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..
did-raghava-lawrence-refuse-to-work-with-kamal-haasan
கமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..
actress-indhuja-enjoys-rajini-film-baasha
முக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..
thalapathy-64-song-update-anirudh-reply-to-his-fan
தளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..
akshay-kumar-gifts-onion-earrings-to-twinkle-khanna
ரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..
Tag Clouds