சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி லீட் ரோல் இல்லை - திடுக் அப்டேட்ஸ்

Updates about vijay sethupathi role in super delux

by Sakthi, Mar 27, 2019, 13:05 PM IST
விஜய் சேதுபதி நடிப்பில் மார்ச் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி வரும் காட்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
விஜய் சேதுபதி
 
விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சீதக்காதி. விஜய்சேதுபதி இப்படத்தில் நடித்திருக்கிறார் என்றே முதலில் விளம்பரப்படுத்தினர். ஆனால்  படத்தில் வெறும் 20 நிமிடங்களே விஜய்சேதுபதி வருவதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அது படத்தையே பெருமளவில் பாதித்தது.  விஜய்சேதுபதி கெஸ்ட் ரோலில் தான் வருகிறார் என்று முன்னரே சொல்லியிருந்தால் படம் தப்பித்திருக்கலாம் என்று அந்த நேரத்தில் குறிப்பிட்டனர் பட விமர்சகர்கள். அதே ஃபார்முளாவில் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். ஆனால் படத்தில் வெறும் 38 நிமிடங்கள் மட்டுமே விஜய்சேதுபதி வருகிறாராம்.  மூன்று மணிநேரப் படத்தில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே விஜய்சேதுபதியின் போர்ஷன். ஆனால் சூப்பர் டீலக்ஸ் படக்குழு விஜய்சேதுபதி முழு படத்திலும் நடித்திருக்கிறார் என்கிற ரீதியிலேயே விளம்பரம் செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது. 
 
சூப்பர் டீலக்ஸ் குறித்த மற்றுமொரு சுவாரஸ்ய செய்தி என்னவென்றால், முதலில் படத்தை மூன்று மணிநேரம் முப்பது நிமிடத்திற்கு படத்தை தயார் செய்திருக்கின்றனர். முதலில் நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு அந்த முழு படம் தான் திரையிட்டும் காட்டியிருக்கின்றனர்.  பல நடிகர்கள், தயாரிப்பாளர்களின் அறிவுறுத்தலின் படி படத்தை அரை மணிநேரம் குறைத்து, தற்பொழுது 2 மணிநேரம் 56 நிமிடமாக படத்தை தயார் செய்துள்ளனர்.

You'r reading சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி லீட் ரோல் இல்லை - திடுக் அப்டேட்ஸ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை