உலகத்தில் வித்தியாசமான இடங்களை தேடிபிடித்து அந்த இடத்தில், திருமணம் நடத்துவது தற்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது. குறிப்பாக திரை பிரபலங்கள் மத்தியில் இந்த ட்ரெண்ட் அதிகம் பரவி வருகிறது. தமிழில் அறிமுகமாகி ஹாலிவுட்டுக்கு சென்ற நடிகை எமி ஜாக்சன் தன் திருமணத்துக்கு வித்தியாசமான ஒரு இடத்தை தேர்வு செய்திருக்கிறார்.
‘மதராச பட்டணம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமிஜாக்சன். இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர். எமி ஜாக்சன் தன் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார்.
இதையடுத்து அவர் தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது ஹாலிவுட் பக்கம் சென்றுள்ளார். லண்டனில் பிறந்து வளர்ந்த எமி, கிளாமரில் படுதாராளம் காட்டி வருகிறார். சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தமிழ் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது. ஆனால் அவர் லண்டனில் வளர்ந்தவர் என்பதால் அவருக்கு இதில் எந்த நெருடலும் இருக்காது.
எமி ஜாக்சன், தொழிலதிபரான ஜார்ஜ் பனயிட்டோ என்பவரை காதலித்து வருகிறார். லண்டன் வீதிகளில் தனது காதலருடன் எமி சுற்றி வருவதை பலரும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களாக பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் எமி தனது காதலரான ஜார்ஜ் உடன், கிரீஸ் நாட்டிலுள்ள மிக்கோநொஸ் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அத்தீவு ஏமியை மிகவும் ஈர்த்துவிட்டது.
கடற்கரையோரத்தில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று வெகு நாள்களாக சரியான இடத்தை தேடி வந்தார் எமி . ரொமாண்டிக்கான சூழல் நிறைந்த மிக்கோநொஸ் தீவு எமியை மிகவும் கவர்ந்துவிட்டது. தற்போது மிக்கோநொஸ் தீவில் இருக்கும் ஒரு ரிசார்ட்டில் எமியின் திருமணம் நடைபெறுவதாக உறுதி செய்துள்ளனர்.