இது சும்மா டிரெய்லர் தான்மா... பாடகராக மாறிய ஹர்பஜன் சிங்

தமிழ் ரசிகர்களுக்காக பாடகராக மாறியுள்ளார் சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங்.

கடந்தாண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி தமிழில் பதிவிட்டு சென்னை கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ரஜினிகாந்த் முதல் பிரபல நடிகர்கள் பலர் பேசிய பிரபல பஞ்ச் வசனங்களுடன் அவர் பதிவிடும் ட்வீட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகுவது வழக்கம். தமிழக இளைஞர் ஒருவர் மூலம் இந்தப் பதிவுகளை அவர் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இதற்கெல்லாம் ஒருபடி மேலாக சென்று தற்போது பாடகராகவும் மாறியுள்ளார். அணிக்கான விளம்பர பாட்டு ஒன்றை அவர் பாடியுள்ளார்.

இதன் சாம்பிள் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ``அன்பால் நிறைந்த ஆனந்தங்கள் ஆயிரம், அதற்கு எல்லைகள் ஏதும் இல்லை என்பதற்கு இதுவே உதாரணம். என் தமிழ் மக்களுக்காக முதல் பாட்டு. இது சும்மா டிரெய்லர் தான்மா இன்னும் மெயின் பிக்சர பார்க்கலயே. நான் அவிழ்த்துவிடும் பாட்டுல பல விசிலு சத்தம் காதுல கேளு கேளு இது கானா பாட்டு" எனக் கூறி தனது பாடலின் சாம்பிள் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நாளை மறுநாள் தனது மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
Indian-cricket-squad-west-indies-tour-announced
மே.இ.தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்; இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு
Indian-cricket-wicket-keeper-ms-Dhoni-pulls-out-West-Indies-tour-decides-serve-army-2-months
மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி விலகல் ; 2 மாதம் ராணுவத்தில் பணியாற்ற முடிவு
In-cricket-Substitute-players-permitted-to-batting-and-bowling-when-players-injured-ICC-announced
கிரிக்கெட் விதிகளில் அதிரடி திருத்தம்; சப்ஸ்டிட்யூட் வீரர்களும் பேட்டிங், பந்து வீச அனுமதி
CWC-England-won-the-world-cup-in-thrilling-match-against-New-Zealand
என்னா 'த்ரில்'... முதல்ல 'டை'... சூப்பர் ஓவரும் 'டை'...! இங்கிலாந்து
CWC-final-England-242-runs-New-Zealand-match-capture-Cup-first-time-history
உலக கோப்பையை கைப்பற்றுமா இங்கிலாந்து...? 242 ரன்கள் எடுத்தால் சாத்தியம்
England-vs-New-Zealand-CWC-final
உலக கோப்பை பைனல்; நியூசிலாந்து பேட்டிங் - வெல்லப் போவது யாரு?
CWC--what-prize-amount-each-team
உலக கோப்பை 'திருவிழா' இன்றுடன் நிறைவு..! யாருக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?
CWC--what-is-the-prize-amount-for-each-team
உலககோப்பை பைனல் : இங்கி.,VS நியூசி., மல்லுக்கட்டு; முதல் முறை கோப்பை யாருக்கு ..?
20-year-old-Rashid-Khan-appointed-as-Afghanistan-captain-of-all-forms-of-cricket
20 வயதான ரஷீத்கான்.. ஆப்கன் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்
CWC-No-flight-tickets-to-return-home-team-India-stranded-in-England-till-Sunday
'நாடு திரும்ப டிக்கெட் கிடைக்கல..' எதிர்பாராத தோல்வியால் இந்திய அணிக்கு இப்படியும் ஒரு சோதனை
Tag Clouds