எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கவிருக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க இருக்கிறார்.
விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் டூரிங் டாக்கீஸ். அந்த படத்தை இயக்கி தயாரித்து மட்டுமின்றி, அவரே நடிக்கவும் செய்திருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தவிர, நையப்புடை, கொடி, டிராஃபிக் ராமசாமி உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்திருந்தார். குறிப்பாக டிராஃபிக் ராமசாமி படத்தில் லீட் கேரக்டரில் நடித்திருந்தார்.
ஒரு காலத்தில் இயக்கத்தில் ஜாம்பவானாக இருந்த எஸ்.ஏ.சி, சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி படப்பிடிப்பும் துவங்க இருக்கிறதாம். 2012 ஆம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக ஜெய் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.