ப்பா.. சிவகார்த்திகேயன், நயந்தாரா ஆட அனிருத் பாட ஹிப்ஹாப் தமிழா மியூசிக் போட.. டக்குன்னு டக்குன்னு லிரிக் விடியோ ரிலீஸ்!

Sivakarthikeyan Mr Local first single release

by Mari S, Apr 6, 2019, 21:00 PM IST

ராஜேஷ். எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் முதல் சிங்கிளான ‘டக்குன்னு டக்குன்னு’ பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியானது.

எஸ்.எம்.எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற காமெடி படங்களை இயக்கி மக்கள் மத்தியில் இடம் பிடித்த இயக்குநர் ராஜேஷ், சிவகார்த்திகேயன், நயன்தாராவை வைத்து இயக்கியுள்ள படம் தான் மிஸ்டர் லோக்கல்.

இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி வைரலான நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள டக்குன்னு டக்குன்னு பாடல் லிரிக் வீடியோ இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க வில்லை என்றாலும், ஹிப் ஹாப் ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் பாடி, சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.

மிர்ச்சி விஜய் எழுதியுள்ள இளமை துள்ளலான இந்த பாடல் விரைவில் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது.

அரை டஜன் படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயனுக்கு மிஸ்டர் லோக்கல் வெற்றியடைந்தால், மற்ற படங்களின் வியாபாரம் விண்ணைத் தொடும் என சினிமா வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன.

You'r reading ப்பா.. சிவகார்த்திகேயன், நயந்தாரா ஆட அனிருத் பாட ஹிப்ஹாப் தமிழா மியூசிக் போட.. டக்குன்னு டக்குன்னு லிரிக் விடியோ ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை