இதற்கு பாலாவின் தமிழ் வெர்ஷனே மேல்... அர்ஜூன் ரெட்டியின் பாலிவுட் வெர்ஷன் டீசர்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தை பிற மொழி இயக்குநர்கள் நீ நான் என்று போட்டி போட்டு கொண்டு ரீமேக் செய்ய முயற்சி செய்தனர். தமிழில் இயக்குநர் பாலா விக்ரமின் மகன் துருவ்வை வைத்து முழு படத்தையும் ரீமேக் செய்தார். ஆனால் படன் ரிலீஸாகும் நிலையில் இருந்தபோது, படம் திருப்தியாக இல்லை என்று கூறி கைவிடப்பட்டது. தற்போது வேறு இயக்குநரை வைத்து மீண்டும் எடுக்கப்பட உள்ளது.

கபிர் சிங்

இந்நிலையில் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.  பாலிவுட்டில் நடிகர் ஷாகித் கபூர் நடிப்பில் ‘கபீர் சிங்’ என்னும் பெயரில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தை இயக்கிய சந்தீப் வாங்காவே பாலிவுட்டிலும் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் சில மாற்றங்கள் செய்து பாலிவுட் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் ஜூன் 21ம் தேதி ரிலீசாகிறது.

என்னதான் இருந்தாலும் அர்ஜூன் ரெட்டி அளவுக்கு ஹிந்தி ‘கபீர் சிங்’ இல்லை.

Kabir Singh  Official Teaser  : https://bit.ly/2uU1Icd

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்