ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின் போஸ்டர் திருட்டு சர்சைக்கு உள்ளாகியுள்ளது.
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இது ரஜினியின் 167வது படம். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குவதால், படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பை நேற்று படக்குழு வெளியிட்டது. தர்பார் என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தின் போஸ்டர் ஆங்கில படமொன்றின் காப்பி என்கிற சர்ச்சை தற்பொழுது உருவாகியுள்ளது.
2017ஆம் ஆண்டு வெளியான அர்னால்டு ஸ்வாஸ்நேகர் நடித்த ஹாலிவுட் படம் ‘கில்லிங் கன்தர்’. இப்படத்தின் போஸ்டரைப் போலவே அமைந்துள்ளது தர்பார் பட போஸ்டரும். தர்பார் போஸ்டரில் அசால்டு சிரிப்புடன் ரஜினி இருக்க அவரைச்சுற்றி துப்பாக்கிகளும், காவல் நாய், போஸீஸ் அணியும் இடைவார், போலீஸ் தொப்பி என அமைந்துள்ளது. அதுபோலவே அந்த ஆங்கிலப் பட போஸ்டரிலும் அதே போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக படத்தின் மற்ற கேரக்டர்களும் இடம்பெற்றுள்ளனர் அவ்வளவே. ஆனால் இரண்டிலும் காவல்துறை சம்பந்தப் பட்ட குறியீடுகள் ஒன்றாகவே இருக்கின்றனர்.
மொமண்டே படத்தை கஜினி படமாக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அவரின் எல்லா படங்களிலும் திருட்டு சர்ச்சையும் கூடவே வரும். ஆனால் இந்த முறை போஸ்டர் வெளியீட்டிலேயே காப்பியடித்திருக்கிறார் என்று பொங்கிவருகிறார்கள் ரசிகர்கள். அதுவும் ரஜினி படத்திலேயே காப்பியா என்கிறார்கள். இந்த முறை ஏ.ஆர்.முருகதாஸின் காப்பிக்கு ரஜினி உடைந்தையாக இருக்கிறாரா என்கிற கேள்வியும் எழுகிறது.