இந்துஜாவுக்கு ட்ரெய்னிங் கொடுக்கப்போகும் விஜய்

Induja to act in thalapathy 63 with vijay

by Sakthi, Apr 10, 2019, 11:32 AM IST

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமான ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்துஜா

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் தொடங்கி நடந்துவருகிறது. படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார். இவர்களோடு கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி என ஒரு பெரிய கூட்டணியே படத்தில் நடிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் லிஸ்டும் ஒவ்வொருநாளும் அதிகமாகிக் கொண்டே போகிறது. அப்படி ஒப்பந்தமாகும் நடிகர்களும் உச்ச நட்சத்திரங்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், `மேயாத மான்’ இந்துஜா இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துவருகிறாராம். இவருக்கான படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி நடந்துவருகிறதாம். படத்தில் கால்பந்து வீரராக வருகிறார் இந்துஜா. இவரின் பயிற்சியாளராகவே விஜய் நடிப்பதாகவும் சொல்கிறார்கள்.

சமீபத்தில் சென்னையை அடுத்து பூந்தமல்லி செல்லும் வழியில் உள்ள இ.வி.பி பூங்காவில் பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அந்த செட்டில் தான் க்ளைமேக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading இந்துஜாவுக்கு ட்ரெய்னிங் கொடுக்கப்போகும் விஜய் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை