இயக்குநர் பாலாவினால் பணநெருக்கடியில் சிக்கி தவிக்கும் சசிகுமார்

by Sakthi, Apr 16, 2019, 17:16 PM IST
Share Tweet Whatsapp

பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்துக்கான கடனில் இருந்து இன்னும் சசிகுமார் வெளிவரவில்லை.

பாலா சசிகுமார்

கடந்த 2016ல் பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியானது தாரை தப்பட்டை. இது இளையராஜாவின் ஆயிரமாவது படம். இப்படத்தினை தயாரித்த சசிகுமாருக்கு 30 கோடி ரூபாய் வரை நஷடம் ஏற்பட்டது. இப்படத்தினால் ஏற்பட்ட கடனை அடைக்க, அடுத்தடுத்து படங்களை ஒப்பந்தம் செய்துவருகிறார் சசிகுமார்.

சிறிய கதாபாத்திரம் என்றாலும் சரி, புதிய இயக்குநர் என்றாலும் சரி எந்த படமென்றாலும் ஒப்பந்தமாவது, அதிலிருந்து வரும் பணத்திலிருந்து தாரை தப்பட்டை படத்தின் கடனை செட்டில் செய்வது என்று ஓடிக்கொண்டிருக்கிறார். கமிட்டாகும் படத்தின் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கடன் வாங்கியவருக்கு தருவதாக உறுதியும் அளித்துள்ளார் சசிகுமார்.

ரஜினி நடித்த பேட்ட படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் சசிகுமார். அடுத்து தனுஷூக்கு அண்ணனாக எனைநோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்துள்ளார். அது அடுத்து வெளியாக இருக்கிறது. நாயகனாக எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ‘கொம்பு வச்ச சிங்கமடா’, சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள்-2’, சுசீந்திரன் இயக்கும் ‘கென்னடி கிளப்’ மற்றும் சுந்தர்.சி-யின் உதவியாளர் இயக்கும் புதிய படம் என ஏகப்பபட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்களையெல்லாம் முடித்த கையோடு, சலீம் பட இயக்குநர் நிர்மல்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சசிகுமார். அரவிந்த்சாமி, த்ரிஷா நடிக்க சதுரங்கவேட்டை 2 படத்தை இயக்கிவருகிறார் நிர்மல்குமார். ஆனால் தயாரிப்பாளர் மனோபாலாவுக்கும் அரவிந்த்சாமிக்கு இடையேயான கருத்துவேறுபாடால் படம் முடங்கிகிடக்கிறது. அதனால் சதுரங்கவேட்டை படத்தை உதறிவிட்டுவிட்டு, சசிகுமாரை இயக்க தயாராகிவிட்டார் நிர்மல். ‘கல்பதரு பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது.

 


Leave a reply