நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டு போட்டதாகக் கூறியது பொய்யா? உண்மையில் நடந்தது என்ன

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் குறித்தும் சர்ச்சையான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.


srikanth

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்ததும், தானும் தனது மனைவியும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வாக்களித்ததாக பேட்டி அளித்தார். தனது சமூக வலைத்தளத்தில் வாக்களித்த மையுடன் கூடிய விரல் போட்டோவையும் பதிவு செய்திருந்தார்.

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்கு செலுத்தியது குறித்து பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, `அவர் வாக்களிக்கவில்லை, அவரது விரல்களில் மை மட்டுமே வைக்கப்பட்டது’ என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

என்னதான் நடந்தது என்று ஆராய்ந்ததில் கிடைத்த தகவல்கள் கீழே..
நடிகர் ஸ்ரீகாந்த் இதற்குய் முந்தைய தேர்தல் வரை சென்னை சாலிகிராமத்தில் இருக்கக்கூடிய காவேரி பள்ளிக் கூடத்தில்தான் வாக்கு செலுத்தி வருகிறார். ஆனால் இதனிடையே வீடு மாறிவிட்டார். இதனால் அவரின் பெயரும் வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருக்கு தகவல் கொடுக்கப்படவில்லை. தேர்தல் அன்று காலை 7 மணிக்கே வாக்குச்சாவடி வந்த ஸ்ரீகாந்துக்கு ஏமாற்றம் காத்திருந்தது. லிஸ்டில் அவர் பெயர் இல்லை என்றதுல் அங்கிருந்த சில அதிகாரிகள் நீண்ட ஆலோசனைக்கு பிறகு அவர் வழக்கமாக இங்கு தான் வாக்களிப்பார். எனவே அவர் வாக்களிப்பதில் பிரச்னை இல்லை என்று கூறி அவரை வாக்களிக்க அனுமதித்துள்ளனர். அவர் வாக்களித்துவிட்டு வெளியே வந்ததும் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். வேறு வாக்குச்சாவடிக்கு பெயர் மாற்றப்பட்ட போதிலும் ஒரு நடிகர் என்பதால் ஸ்ரீகாந்தை வாக்களிக்க அனுமதியளித்துள்ளது குறித்து சர்ச்சை எழுந்தது. அதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, `அவர் வாக்களிக்கவில்லை, அவரது விரல்களில் மை மட்டுமே வைக்கப்பட்டது’ என்று அதிர்ச்சி கிளப்பியுள்ளார்.

பாலிவுட்டில் படமாகும் உலகக்கோப்பை 1983.. அதிக ரன்கள் குவித்த வீரரின் வேடத்தில் நம்ம ஜீவா

Advertisement
More Cinema News
is-nayanthara-entering-into-politics
அரசியலில் குதிக்கிறாரா நயன்தாரா? கட்சிகள் சேர்க்க போட்டி..
dwayne-bravo-gifts-autographed-t-shirt-to-kamal-haasan
கமலை சந்தித்த மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்.. டிஷர்ட் தந்து நலம் விசாரிப்பு..
bigg-boss-riythvika-reveals-her-crush-on-vijaysethupathi
விஜய்சேதுபதி மீது ரித்விகாவுக்கு வந்த ஈர்ப்பு..பட வாய்ப்புக்கு வலை வீசுகிறாரா?
actor-sathish-got-special-gift-for-his-wedding
காமெடி நடிகரின் கல்யாண பரிசு.. பல வருட கனவு பலித்தது..
blind-school-teachers-emotional-message-to-actor-vijay
தளபதி 64 விஜய்க்கு ஆசிரியர் ஒருவரின் கடிதம்.. பள்ளியில் நடந்த ஷூட்டிங்கால் வில்லங்கம்..
rajinikanth-69th-birthday
லதா, ஐஸ்வர்யா, சவுந்தர்யா, அனிருத்தின் உயிர், தலைவர் யார்? ரஜினிக்கு டிவிட்டரில் வாழ்த்துக்களை கொட்டினர்..
hbd-thalaivar-superstar-rajini-from-nayanthara
எனது குரு உத்வேகம் ரஜினிதான்.. நயன்தாராவின் சூப்பர் வாழ்த்து..
kamal-wishes-rajini-70th-birthday
ரஜினிக்கு வெற்றி தொடரட்டும்..   பிறந்தநாளில் கமல் வாழ்த்து..
rajinikanths-thalaivar-168-starts-with-a-pooja-function-today
தலைவர் 168 - பூஜையுடன் தொடக்கம்.. ரஜினியுடன் குஷ்பு, மீனா பங்கேற்பு..
prithviraj-takes-a-break-from-films-reserves-time-for-family
சினிமாவிலிருந்து பிருத்விராஜ் ஓய்வு.. ஷாக் ஆயிடாதீங்க விஷயம் தெரியுமா?
Tag Clouds