மாதவன் வெளியிட்ட கொலைகாரன் ட்ரெய்லர்!

by Mari S, Apr 24, 2019, 18:32 PM IST

விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் மிரட்டலாக உருவாகி உள்ள கொலைகாரன் பட ட்ரெய்லரை தற்போது நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார்.

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன், நாசர் மற்றும் அஷிமா நர்வால் நடித்துள்ள கொலைகாரன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மாலை 6 மணிக்கு கொலைகாரன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.

காதலியின் மரணத்திற்கு விஜய் ஆண்டனி டெக்னிக்கலாக பழிவாங்குவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது ட்ரெய்லரின் வழியாக தெரிய வருகிறது. சமீபத்தில் வெளியான அருண் விஜய்யின் தடம் படத்திலும் காதலியின் கொலைக்கு நாயகன் பழிவாங்கிவிட்டு, தனது சகோதரனின் உருவ ஒற்றுமையை பயன்படுத்தி தப்பித்துக் கொள்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

கொலைகாரன் படம் என்ன மாதிரியான திரைக்கதையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது படம் வெளியானவுடன் தெரிந்து விடும்.

வரும் மே மாதம் கொலைகாரன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 63 படத்தில் ஷாருக் கான் வில்லனா? என்ன சொல்கிறது படக்குழு


Speed News

 • தெருவுக்கு வாங்கய்யா..

  யஷ்வந்த் சின்கா ட்விட்

  முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா? இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

  May 23, 2020, 14:18 PM IST
 • சிறப்பு ரயில்கள் வேண்டாம்..

  மேற்கு வங்கம் கோரிக்கை

  மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது. 

  May 23, 2020, 13:57 PM IST
 • மகாராஷ்டிராவில் 44 ஆயிரம்

  பேருக்கு கொரோனா பாதிப்பு

  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.

   

  May 23, 2020, 13:53 PM IST
 • ஒரு லட்சத்து 6,750 பேருக்கு

  கொரோனா பரவியது..

  நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து  1,139 பேரில் இருந்து  ஒரு லட்சத்து 6,750 பேராக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174ல் இருந்து 41,298 ஆக அதிகரித்து்ள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை  3,163ல் இருந்து 3,303 ஆக உயர்ந்துள்ளது.

  May 20, 2020, 13:42 PM IST
 • மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு

  1325 பேர் உயிரிழப்பு

  நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் மிகவும் அதிகமானோருககு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 37,136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 1325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காவல்துறையில் மட்டும் 1388 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 428 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர். 

  May 20, 2020, 13:37 PM IST