சொடக்கு மேல சொடக்கு.. இறுதியில் ஜெயித்தது யார்? - அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம்

Advertisement
ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்த அவெஞ்சர்ஸ் திரைப்படங்கள்ளின் இறுதிப் பாகமான அவெஞ்சர் எண்ட் கேம் வெளியாகியிருக்கிறது. மீளா துயரத்தில் இருக்கும் சூப்பர் ஹீரோக்கள், பிரபஞ்சத்தையே கைக்குள் அடக்கிவைத்திருக்கும் வில்லன் இவர்களில் ஜெயித்தது யார்? இந்த தர்மயுத்தம் ரசிகர்களை ஈர்த்ததா? 

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்
 
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படமானது, முந்தைய பாகமான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் தொடர்ச்சியாகவே நீள்கிறது. அதனால் முந்தைய பாகத்தில் கதைச்சுருக்கத்தை தெரிந்துகொள்வோம். இந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போல பல கிரகங்கள் இருக்கிறது. அந்த கிரகங்களில் சக்திவாய்ந்த ஆறு கற்கள் மறைந்து கிடக்கிறது. அந்த ஆறு கற்களையும் ஒன்று சேர்த்தால் உலகத்தையே அழித்துவிட முடியும். அதை செய்ய முயல்கிறான் வில்லன் தானோஸ். அதிபயங்கரமான அழிக்கவே முடியாத சூப்பர் வில்லன் தான் இந்த தானோஸ். சக்திவாய்ந்த ஆறு கற்களை சேகரித்து ஒரே சொடக்கில் இந்த உலகத்தில் பாதியை அழித்தும் விடுகிறான் தானோஸ். இதில் பல சூப்பர் ஹீரோக்களும் காற்றோடு காற்றாக மாயமாகிவிடுகின்றனர். இறுதியில் நிக் ஃபியூரியும் இறந்துவிடுகிறார். இப்படியாக முடிந்தது அவெஞ்சர் இன்ஃபினிட்டி வார்.
 
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்
 
அடுத்தது அவெஞ்சர் எண்ட் கேம் பற்றி...
 
உலகமே பாதி அழிந்துவிட்டது. முந்தைய பாகத்தில் 25க்கும் மேற்பட்ட சூப்பர் ஹீரோக்கள் தானோஸூக்கு எதிராக நின்றனர். ஆனால் இப்போது ஒரு சிலரே எஞ்சி இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த பாகத்தில் விண்வெளியில் வீசப்பட்ட அயர்ன் மேனை மீண்டு பூமிக்கு கொண்டுவருகிறார் கேப்டன் மார்வெல். தானோஸை  கண்டுபிடித்து கற்களை பிடுங்குவதற்காக எஞ்சியிருக்கும் அவெஞ்சர்ஸ் டீம் கிளம்புகிறது. ஆனால், கற்கள் தானோஸிடம் இல்லை.  தோனோஸை அழித்தும் விடுகிறது அவெஞ்சர்ஸ் டீம். ஐந்து வருடங்கள் ஓடிவிடுகிறது. குவாண்டம் கோரில் சிக்கியிருக்கும் ஏன்ட் மேன் ஐந்து வருடத்துக்குப் பின் வெளியே வருகிறான்.தானோஸ் பூமியை அழித்துவிட்டதை தெரிந்துகொள்கிறான். நிலைமையை சரிசெய்ய கடந்த காலத்துக்கு டைம் டிராவல் செய்தால் சாதிக்கலாம் என்று கூறுகிறான். அவெஞ்சர்ஸ் டீமை ஒன்று திரட்டி, தானோஸை அழிக்க கடந்த காலத்துக்கு செல்கிறது அவெஞ்சர்ஸ் டீம். சக்திவாய்ந்த கற்கள் மீட்கப்பட்டதா, தானோஸ் ஒழிந்தானா, உலகம் மீட்கப்பட்டதா என்பதே மீதிக்கதை. 
 
மார்வெல் நிறுவத்தின் 22வது சூப்பர் ஹீரோ படம் இது.  அவெஞ்சர்ஸ் பட வரிசையில் நான்காவது படம். அவெஞ்சர்ஸின் இறுதிப் பாகம் என்பதால்  பல எதிர்பார்ப்புகள் இருந்தது. அத்தனையும் பூர்த்தி செய்திருக்கிறது என்று தான் கூறவேண்டும். அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா, பிளாக் விடோ, ஹாக் ஐ, ஏன்ட் மேன், ஸ்பைடர் மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஹல்க், தோர், பிளாக் பாந்தர் என பல சூப்பர் ஹீரோக்களை ஒரே படத்தில் பார்த்துவிடமுடியும் என்பது படத்தின் ப்ளஸ். 
 
அயர்ன் மேனான டோனி ஸ்டார்க்கிற்கு தமிழில் டப்பிங் கொடுத்திருப்பவர் விஜய்சேதுபதி. அது படத்தோடு பொருந்தவில்லை. கடந்த பத்து வருடமாக அயர்ன்மேனுக்கு நாம் கேட்டுப் பழகிய குரல் இன்றி, வேறு குரலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் பிளாக் விடோவுக்கான ஆண்ட்ரியா குரல் நச் பொருத்தம். முழு உணர்வையும் பெறவேண்டுமென்றால் படத்தை ஒரிஜினல் மொழியான ஆங்கிலத்திலேயே பார்த்துவிடவும். 
 
படத்தில் பல ஆச்சரியங்களும், நாஸ்டாலஜிக் நினைவுகளும் அதிகமாக இருக்கிறது. அதுவே படத்தின் வெற்றிக்கும், படத்தோடு நம்மை ஒன்றிணைக்கவும் செய்கிறது. குடிக்கு அடிமையாகி தொப்பையுடன் வரும் தோர், அயர்ன் சூட்டுக்கு நோ சொன்ன அயர்ன்மேன், கில்லராக மாறியிருக்கும் ஹாக் ஐ என ஒவ்வொருவரின் இண்ட்ரோ காட்சிகளும் அபாரம். 
 
சூப்பர் ஹீரோ படமென்றாலே வில்லன் தோற்கவேண்டும். ஹீரோ ஜெயிக்கவேண்டும் என்பதே சம்பிரதாயம். ஆனால் அந்த வீல்லன் அழிக்கமுடியாத சக்தியோடு இருந்தால், சூப்பர் ஹீரோக்களை போட்டு புரட்டியெடுத்தால், வில்லன் வந்துவிட்டாலே ஹீரோக்கள் பத்தடி பின்னாடி ஓடினால் அதுவே தானோஸ். ஒவ்வொரு காட்சியிலும், மிரட்டலிலும், வசனத்திலும் கவர்கிறான். அழிக்கவே முடியாத ஆழ்கடல் பேராழியாக கண்முன் நிற்கிறான். எதிரில் நாற்பது ஐம்பது சூப்பர் ஹீரோக்கள் வந்தாலும் தானோஸை அசைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. வில்லனுக்கு இப்படியான ஒரு கதாபாத்திர வடிவமைப்பே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். தானோஸாக நடித்த ஜோஸ் புரோலின் வாவ்! 
 
படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி சிலரை அழவைக்கும். சிலரை கொண்டாடவைக்கும். ஆக்‌ஷனும், எமோஷனுமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இறந்துவிட்ட தானோஸ் மீண்டும் வரும் இடமாகட்டும், கேப்டன் அமெரிக்கா தன்னுடனே மோதும் காட்சி, அயர்ன்மேன் தன்னுடைய தந்தையை சந்திக்கும் இடம், அஸ்கார்டுக்கு டிராவல் செய்யும் தோர், கேப்டன் அமெரிக்கா தன்னுடைய காதலியை சந்திக்கும் இடம் என மார்வெல் ரசிகர்களுக்கு எக்கச்சக்க நாஸ்டாலஜிக் நினைவுகள் காத்திருக்கிறது. 
 
ஒளிப்பதிவு, எடிட்டிங், கிராபிக்ஸ் வேலைகள் என அனைத்திலுமே பெஸ்ட் கொடுத்திருக்கிறது படக்குழு. ஆக்‌ஷன் அதகளத்தோட ஒரு சூப்பர் ஹீரோ படத்தைப் பார்க்கவேண்டுமென்றால் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பார்க்கலாம். 
 
நிற்க, இதுவரை மார்வெலின் சூப்பர் ஹீரோ படங்கள் பார்த்ததில்லை என்றால், இந்தப் படம் உங்களுக்கானது அல்ல. குறைந்தபட்சம் அவெஞ்சர்ஸ் சீரிஸை பார்த்திருந்தால் மட்டுமே இந்தப் படத்தோடு நம்மை இணைத்துக் கொள்ளவும் முடியும். படமும் புரியும். 
Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>