விஜய்-கத்ரீனா கைஃப் ட்ரெண்டிங்...! காரணம் என்ன தெரியுமா?

Advertisement

சமூக ஊட்டங்களில் எப்போது, எது ட்ரெண்ட் ஆகும் என்று சொல்லவே முடியாது. அப்படிதான், நடிகர் விஜய்யும்; கத்ரீனா கைஃபும் இன்று ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாவை ஆக்கிரமித்து உள்ளனர். இருவரும், ஏதாவது படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்களா? என்ற காரணத்திற்காக விஷயத்தை அறிந்து கொள்ள அலசி ஆராய்ந்தோம்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான, கத்ரீனா கைஃப், ‘பீட் ஆப் வித் தி ஸ்டார்ஸ்’ என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில், தொகுப்பாளினி கேட்கும் வேள்விகளுக்கு கத்ரீனா கைஃப் மிகவும் சுவராசியமாக பதில் அளித்திருக்கிறார். நிகழ்ச்சியில் நடிகர் விஜய் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த கத்ரீனா கைஃப், கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய் மிகவும் எளிமையானவர்’ என்றார். எதனால், அப்படி சொல்கிறீர்கள் என தொகுப்பாளினி கேட்க, அந்த சம்பவம் குறித்து விளக்கினார் கத்ரீனா.

‘ஒரு விளம்பர படம் ஷூட்டிங்கிற்காக நானும் விஜய்யும் ஊட்டிக்கு சென்றிருந்தோம். அப்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். கையில் எனது மொபைல் போனில் எதோ பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்த சமயத்தில், என்னை நோக்கி யாரோ நடந்து வருவது போல் தெரிந்தது, அவரின் கால்களைக் கவனித்தேன்,ஆனால் வருவது யார் என்று பார்க்கவில்லை. போனில் பிஸியாக இருந்தேன். சிறிது நேரம் கழிந்தும் அந்த ‘ஷு’ அணிந்த கால்கள் நகராமல் என் முன்னே நின்று இருந்ததை உணர்ந்தேன். எதற்காக நிற்கிறார் என நிமிர்ந்து பார்த்தேன். நின்றிருந்தது விஜய். ஷூட்டிங் முடிந்து விட்டது கிளம்பலாம் என்று சொல்வதற்காக வந்திருக்கிறார். அந்த சமயத்தில் நான் பிஸியாக இருந்ததால் தொந்ததர்வு செய்யாமல் காத்து கொண்டிருந்தார். விஜய் மிகவும் எளிமையாக மனிதர்’ என்று கூறியிருக்கிறார்.

கத்ரீனாவின் இந்த கருத்துதான் இன்றைக்கு ட்ரென்ட் ஆனதற்கான காரணம். என்றோ நடந்த விஷயங்கள், பிரபலங்களின் பேட்டிகள் போன்றவை காலம் கடந்தும், இணையதலவாசிகளின் பார்வையில் பட்டு ட்ரெண்டிங் ஆகி விடும். அப்படிதான், இன்று கத்ரீனா கைஃப் – விஜய்யும் காரணமின்றி திடீரென ட்ரென்ட் ஆகியுள்ளனர். கத்ரினாவின் இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் தற்போது அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

அதிகாலையில் வாக்களித்த பிரியங்கா சோப்ரா, ரேகா 4ம் கட்டத் தேர்தல் விறுவிறுப்பு

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>