அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள எம்ஜிஎம் கிராண்ட் கார்டன் அரீனாவில் நடைபெற்று வரும் பில்போர்ட் இசை விருது விழா கலர்ஃபுல்லாக களைகட்டியது.
பாடகர் டிரேக் பில்போர்ட் இசை விருது விழாவின் முக்கிய விருதான டாப் ஆர்டிஸ்ட் விருதினையும், சிறந்த பாடகர் விருதினையும் வென்றார்.
சிறந்த பாடகி விருதினை அரினா கிராண்டே வென்றார். மேலும், பில்போர்ட் சாதனையாளர் விருதினையும் அரினா வென்றார்.
டாப் ஹாட் 100 பாடல்கள் விருதினை கார்டி பியின் கேர்ள்ஸ் லைக் யூ பாடல் வென்றது. சிறந்த ராப் பாடலுக்கான விருதினையும் கார்டி பி குழுவின் ஐ லைக் இட் பாடல் அள்ளியது.
இசை விருது விழாவுக்கு முன்னர் நடைபெற்ற சிகப்பு கம்பள அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் கண்ணை பறிக்கும் கவர்ச்சி உடைகளில் அணிவகுத்து ரசிகர்களை கவர்ந்தனர்.
ஊதப்பூ நிற மினி உடையில் ரெட் கார்ப்பெட்டில் கலந்து கொண்ட பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவரும் பாடகருமான நிக் ஜோனஸ் தனது இசை சகோதரர்களான ஜோ ஜோனஸ் மற்றும் கெவின் ஜோனஸுடன் ரெட் கார்ப்பெட்டில் கலந்து கொண்டார்.
பாடகி சியாரா கருப்பு நிற கவர்ச்சி உடையில் தனது மகன் ஜாகிருடன் போஸ் கொடுத்தார்.
பில்போர்ட் இசை விழாவில் விருதுகளை அள்ளிய கார்டி பி மஞ்சள் நிற உடையில் படுகவர்ச்சியாக ரெட்கார்ப்பெட்டை அலங்கரித்தார்.
பாடகி பெக்கி ஜி கிளிட்டர் உடையில் சிகப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக போஸ் கொடுத்தார்.
பிரபல பாடகிகளான ஜூலியா மைக்கேல்ஸ் மற்றும் சபரினா கார்பெண்டர் பில்போர்ட் இசைத்திருவிழாவில் கலந்து கொண்டு போஸ் கொடுத்தனர்.
சீ த்ரூ உடையில் பாடகி சோபியா ரேயஸ் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ரெட்கார்ப்பெட் நிகழ்ச்சியை அலங்கரித்தார்.
நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் தம்பதி சகிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தினர்.
இளம் பாடகி கெய்ர்னன் சிப்கா கருப்பு நிற சீ த்ரூ உடையுடன் சிகப்பு நிற கவுன் அணிந்து ரெட் கார்ப்பெட்டில் கலந்து கொண்டார்.
மேலும், பல பாடகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அமெரிக்க நேரப்படி (மே 1) புதன் இரவு நடைபெறும் இந்த நிகழ்ச்சி, இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் நடந்து வருகிறது.