அந்த மனசு இருக்கே அதான் சார் கடவுள்.. லாரி டிரைவரை பாடகராக்கிய இமான்!

Imman Turns a Malaysian Truck Driver into a Singer

by Mari S, May 3, 2019, 15:31 PM IST

பொன் மாணிக்கவேல் படத்தில் மலேசியாவை சேர்ந்த லாரி டிரைவரை பாடகராக்கியுள்ளார் இசையமைப்பாளர் இமான்.

புதிய குரல்களை பாடகர்களாக அறிமுகப்படுத்தி வரும் இசையமைப்பாளர் இமான், மலேசியாவை சேர்ந்த லாரி டிரைவர் தியாகராஜா சுப்ரமணியத்திடம் இருக்கும் பாடும் திறனை கண்டறிந்து அவரை பாடகராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடித்து வரும் ஆக்‌ஷன் படமான பொன் மாணிக்கவேல் படத்தில் ஒரு பாடலை தியாகராஜா சுப்ரமணியம் பாடியுள்ளார்.

மலேசியாவில் லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் தியாகராஜா சுப்ரமணியம், தனது பாடும் திறமையை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தியாகராஜாவின் தனித்துவமான குரலை கேட்ட இமான், அவருக்கு இந்த படத்தில் பாடும் வாய்ப்பை வழங்கியுள்ளார்.

வாய்ப்புக்காக தேடி அலைந்தாலும் திறக்காத சினிமா கதவுகள் நல்ல திறமையை கண்டு தானே திறக்கும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

ஆரோக்கியத்தையும் அழகையும் தரும் பால்

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை