தயாரிப்பாளராகும் விஜய் சொந்த தயாரிப்பில் தானே நடிக்கவும் திட்டம்!

Actor Vijay thinks to turn as a producer soon

by Mari S, May 3, 2019, 19:45 PM IST

நடிகர் விஜய் கால்ஷீட்டுக்காக தமிழ் பட தயாரிப்பாளர்கள் க்யூவில் காத்துக் கொண்டு இருக்கின்றனர் என்று சொன்னால் அது என்றுமே மிகையாகாது. தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற ஃபேவரைட் ஹீரோவாக விஜய் நீண்ட காலமாக இருந்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் தனது தந்தை சந்திரசேகர் தயாரிப்பில் உருவான பல படங்களில் நடித்த விஜய், கடைசியாக தனது குடும்ப தயாரிப்பு படமான ஆதி திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் தோல்வியடைந்த நிலையில், அதற்கடுத்து சொந்த தயாரிப்பில் ரிஸ்க் எடுக்க விஜய் விரும்பவில்லை.

ஆனால், தற்போது, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், விஷால், விஷ்ணு விஷால் என பல இளம் நடிகர்களும் சொந்த தயாரிப்பில் சாதித்து வரும் நிலையில், நடிகர் விஜய்க்கும் தயாரிப்பாளராகும் எண்ணம் உருவாகியுள்ளது.

தனது சொந்த தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தில் தானே நடிக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார். தளபதி 63 படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை விஜய் தயாரிக்கவும் முடிவு எடுத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஏற்கனவே மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் வேலாயுதம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading தயாரிப்பாளராகும் விஜய் சொந்த தயாரிப்பில் தானே நடிக்கவும் திட்டம்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை