காமெடி நடிகர்களான சந்தானம் மற்றும் யோகிபாபு இணைந்து நடித்துவரும் படத்துக்கு டைட்டில் வெளியாகியுள்ளது.
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தில்லுக்கு துட்டு 2. காமெடியனாக இருக்கும் போது ஒவ்வொரு வெள்ளியும் சந்தானத்தின் படங்களை எதிர்பார்க்கலாம். ஆனால் இப்போது ஹீரோவாக மட்டுமே நடிப்பதால் படங்கள் சந்தானத்துக்கு குறைந்துவிட்டது. தற்பொழுது ஜான்சன் இயக்கத்தில் ஏ1, ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படம் என இரண்டு படங்களில் பிஸியாக இருக்கிறார்.
இதற்கு நடுவே, ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தில் தான் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மும்பையில் முடிந்த இறுதிக் கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்பொழுது நடந்துவருகிறது. இந்நிலையில், இப்படத்துக்கு டகால்டி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
யோகி பாபு சந்தானம் இணைந்து செய்ய போகும் டகால்டி
Advertisement