ஒரு செம்ம காம்போவில் உருவாக உள்ள சிவகார்த்திகேயன் படம்

by Sakthi, May 6, 2019, 21:39 PM IST

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன்ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாகிறது. தற்பொழுது சிவா, மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும், இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ்பிக்சன் படத்திலும் நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்களுக்கு நடுவே சிவகார்த்திகேயன், பாண்டியராஜூடன் கூட்டணி சேர்கிறார். இது சிவகார்த்திகேயனின் 16வது படம்.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவா நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே 8ஆம் தேதி பூஜையுடன் தொடங்குகிறது. சிவாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அனு இம்மானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் நாயகியாக தமிழில் அறிமுகமானவர் அனு. அவருக்கு இது இரண்டாவது படம். இவர் மட்டுமின்றி, ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இமான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இப்படத்தை முடித்த கையோடு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவா என்பது குறிப்பிடத்தக்கது.

 

Get your business listed on our directory >>



More Cinema News

அதிகம் படித்தவை