நடிகர் ஜீவாவுக்கு சிம்புவால் ஏற்பட்ட பிரச்னை.. தீர்த்து வைத்த டிடிவி தினகரன்

ஜீவா நடிப்பில் புதுமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் இந்த வாரம் வெளியாக இருக்கும் படம் கீ.
 
கீ
 
செல்வராகவனுக்கு எப்படி படம் வெளியாவதில் ஏகப்பட்ட சிக்கல் நிலவுமோ, அந்த சாபடம், அவரின் உதவி இயக்குநரான காளீஸூக்கும் தொடர்கிறது. அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகிவரும் கீ படம் 2016ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படம் தயாராகியும், ஒரு வருட காலமாக ரிலீஸாக முடியாமல் தள்ளிப் போனது. 
 
இந்தப் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தான் சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை தயாரித்தார். இப்படத்தினால் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தால் ஜீவாவின் கீ வெளியாக முடியாமல் தவித்தது. இந்நிலையில் மே 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல சிக்கல்களைத் தாண்டி தான் படம் வெளியாக இருக்கிறது. 

கீ
 
பணப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட கடைசி நேர சிக்கலால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நேரடியாக டிடிவி தினகரனிடம் இந்த தகவலை கொண்டு சென்றிருக்கிறார். டிடிவி தலையிட்டு சிக்கலை தீர்க்க உதவி புரிந்திருக்கிறார். டிடிவி தினகரன் கட்சியின் சார்பாக திருநெல்வேலி நாடாளுமன்றத் தேர்தலில் மைக்கேல் ராயப்பன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   
 
இறுதியாக பட வெளியீட்டு உரிமையை சுக்ரா ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஆக, இனி எந்த தடங்கல் வந்தாலும், கீ வெளியீடு உறுதி. 
More Cinema News
actress-sharadas-debt-was-repaid-by-producer-antony-after-40-years
பழம்பெரும் நடிகை சாரதாவுக்கு சம்பள பாக்கி தந்த தயாரிப்பாளர்.. 40 வருடம் கழித்து நடந்த ருசிகரம்..
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
mammootty-collaborates-with-director-ram-again
பேரன்பு படத்துக்கு பிறகு மம்மூட்டியுடன் இணையும் இயக்குனர் ராம்...
keerthy-suresh-turns-down-rana-daggubatis-film
கீர்த்தி நடிக்க மறுத்த வேடத்தில் நயன்தாரா.. ராணா தயாரிக்கும் கொரிய மொழிப்படம்..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
international-cricketer-tweets-about-thalapathys-bigil-trailer
விஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..
Advertisement