அதிமுக அரசை கவிழ்க்க திமுக ஒத்துழைக்கணும்...! இல்லைன்னா பயப்படுறீங்கனு அர்த்தம்...! தங்க. தமிழ்ச்செல்வன் தடாலடி

Advertisement

இடைத்தேர்தல் நடைபெற்ற 18 தொகுதிகள் மற்றும் நடைபெறப்போகும் 4 தொகுதிகள் என 22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அமமுகவே வெற்றி பெறும் என்றும், திமுகவுடன் சேர்ந்து எடப்பாடி ஆட்சியைக் கலைப்போம் என்றும் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் ரூ. 1.48 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் முதல் குற்றவாளியாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வம் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செல்வத்தை சிறையில் சந்திக்க வந்த தங்க. தமிழ்ச்செல்வன், செய்தியாளர்களிடம் கூறுகையில், திட்டமிட்டு சூழ்ச்சி செய்து ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் செல்வம் கைது செய்யப்பட் முள்ளார். அவரை ஜாமீனில் வெளியே எடுத்து இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம்.

திமுகவின் 'பி' டீம் அமமுக என அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார். அப்படி நாங்கள் 'பி' டீம் என்றால், நாங்கள் ஏன் தேர்தலில் தனித்து நிற்கப் போகிறோம். திமுகவோடு கூட்டணி சேர்ந்து தேர்தலில் நின்றிருக்க மாட்டோமா? என்றார் தங்க. தமிழ்ச்செல்வன்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் அதிமுக ஆட்சி மீது நம்பிக்கையில்லை. இடைத் தேர்தலில் 22 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அமமுக தான் வெற்றி பெறும். திமுகவோடு சேர்ந்து ஆட்சியைக் கலைப்போம் என்றவர், அதிமுக அரசைக் கலைக்க திமுக ஒத்துழைக்காவிட்டால், தேர்தலைச் சந்திக்க அவர்கள் பயப்படுகிறார்கள் என்றே அர்த்தம் என்றும் ஒரேயடியாக கொளுத்திப் போட்டார் தங்க. தமிழ்ச்செல்வன்

மேலும்,ஆட்சியமைக்க திமுக ஆதரவு கேட்டால் அமமுக ஆதரவு கொடுக்குமா? என்று கேள்வி கேட்டதற்கு, இல்லை என்ற தங்க.தமிழ்ச்செல்வன், தேர்தலை சந்திக்கவே அமமுக விரும்புகிறது என்றும் கூறிவிட்டார்.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>