யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஜிப்ஸி டிரைலர்!

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று வெளியாகின. இந்நிலையில், தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் ஜிப்ஸி டிரைலர் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான கீ படம் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், ஜிப்ஸி படத்தை பெரிதாக எதிர்பார்த்துள்ளார் நடிகர் ஜீவா. குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படம், இந்தியாவில் நடந்து வரும் சமகால அரசியலை பேசும் படமாக உருவாகி உள்ளது, அதன் டிரைலர் மூலமாகவே வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான வெரி வெரி பேட் சாங் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று வெளியான டிரைலரும் சமூக வலைதளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கரு.பழனியப்பன், விரைவில் ராஜூமுருகன் சட்டமன்றம் செல்ல வேண்டும் என வாழ்த்தினார்.

ஜிப்ஸி படம் குறித்து பேசிய ராஜூமுருகன் அரசியலை தாண்டி ஜிப்ஸி ஒரு நல்ல இசைப் படமாக இருக்கும் என கூறினார்.

கருத்துக் கணிப்புகள் பொய்யாகிவிடும்... அதிமுக அமோக வெற்றி பெறும்...! எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Contempt-of-court-case-Chennai-HC-summons-to-Isari-ganesh
நடிகர் சங்கத்தேர்தல் விவகாரம்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ; ஐசரி கணேஷ் ஆஜராக உத்தரவு
Hyderabad-police-penalty-to-Actor-ram
பொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகர்..! அபராதம் விதித்த ஹைதராபாத் போலீஸ்
Film-industry-questions-actress-Nayanthara-for-not-casting-vote-in-the-actors-association-election
ராதாரவி விவகாரத்தில் நடிகர் சங்கத்தை கேள்வி கேட்ட நயன்தாரா...! ஓட்டுப் போடாதது ஏன்
Tamil-great-poet-Kannadasan-birthday-today-some-memories-about-him
வாழ்க்கை அனுபவமே பாடலாக..! பல தலைமுறைகளின் மனதை கொள்ளை கொண்ட கவிஞர் கண்ணதாசன்
Ranjith-controversy-speech-about-Rajarajachozhan
பேச்சுரிமை என்றாலும் வரம்பின்றி பேசுவதா..? பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
Comedy-actor-s.v.sekar-changes-his-drama-title-halwa-and-venue
'அல்வா' நாடகத்தின் பெயர் மாற்றம்... இடமும் திடீர் மாற்றம்... எஸ்.வி.சேகர் காமெடி
Counterfeit-complaint-in-actors-union-election-polling-in-Chennai
நடிகர் சங்கத் தேர்தலிலும் கள்ள ஓட்டு.... மைக் மோகன் ஓட்டை போட்டது யாரோ?
Actors-casting-their-votes-and-expressed-their-views
சங்கக் கட்டடத்திற்காகவே இவ்வளவு போராட்டமும்; விஷால் விளக்கம்
Highcourt-takes-suomotto-condempt-proceedings-against-Isari-Ganesh
நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம்; ஐசரி கணேஷ் மீது அவமதிப்பு வழக்கு
Rajini-blames-actors-association-for-the-delay-in-getting-his-postal-ballot
இது நடந்திருக்கவே கூடாது; நடிகர் சங்கம் மீது ரஜினி கோபம்

Tag Clouds