ஹெச்பிஓவில் கடந்த 9 ஆண்டுகளாக 8 சீசன்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஒருவழியாக நிறைவு பெற்றது.
அயன் த்ரோனை கைப்பற்ற எண்ணிய டேனரிஸை ஜான் ஸ்னோ கொலை செய்ததை கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கவில்லை. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரடியாக ஹெச்பிஓ நிறுவனத்திடமே மீண்டும் கேம் ஆஃப் த்ரோன்ஸின் 8ம் சீசனை வேறு ஒரு இயக்குநர் கொண்டு இயக்கும்படியும் முறையிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், ஜான் ஸ்நோ முடிசூடாமல், ப்ரான் 7 ராஜ்யத்துக்கும் அரசனாக முடிசூடுகிறான். நாயகன் ஜான் ஸ்நோ நைட்ஸ் வாட்ச் எனப்படும் கேஸ்டில் பிளாக்குக்கு செல்வதாகவும், புதிய நிலப்பரப்பை கண்டறிய ஆர்யா ஸ்டார்க் கடல் பயணம் மேற்கொள்வதாகவும், கேம் ஆஃப் த்ரோன்ஸ் நிறைவடைந்துள்ளது.
பொன்னியின் செல்வன் நாவலில் அருள்மொழிவர்மன் முடிசூடாமல் கடைசியில் மதுராந்தக தேவனுக்கு முடிசூடுவது போலவே கேம் ஆஃப் த்ரோன்ஸும் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுக்க கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட சரித்திர வரலாறு நிறைவடைந்துள்ளது. பிரியாவிடை கொடுப்பது மிகவும் கடினமாக உள்ளது. இந்த கதையை எழுதியவர்களுக்கும் இயக்கியவர்களுக்கும் பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.