பக்கிரி என தலைப்பிடப்பட்டுள்ள தனுஷின் ஹாலிவுட் படம் அடுத்த மாதம் இந்தியாவில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகிறது.
ஸ்பெயின் நாட்டு இயக்குநரான கென் ஸ்காட் இயக்கத்தில் தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் ஃபகிர் திரைப்படம் கடந்த ஆண்டு ஸ்பெயினில் சில பல விருது விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றது. கடந்த மே 1ம் தேதி ஸ்பெயினில் தியேட்டர்களில் வெளியான இந்த படம் தனுஷை உலகளவில் கொண்டு சேர்த்துள்ளது.
ஸ்பெயின் மக்கள் தனுஷின் நடிப்பை மிகவும் விரும்புவதாக அண்மையில் படத்தின் இயக்குநரான கென் ஸ்காட் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், தற்போது இந்த படம் அடுத்த மாதம் ஜூன் 21ம் தேதி இந்தியாவில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.
தமிழில் வெளியாகும் இந்த படத்திற்கு நீண்ட தலைப்பு இல்லாமல், சுருக்கமாக பக்கிரி என்ற தலைப்பை படக்குழு வைத்துள்ளது. அதன் போஸ்டர்களை வெளியிட்ட தனுஷ், தனது ரசிகர்களுக்கு உற்சாகத்தை வழங்கியுள்ளார்.
அப்போ என்னை நோக்கி பாயும் தோட்டா அடுத்த மாதமும் வராத பாஸ் என்ற கேள்வியும் கூடவே வருவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை.