சூர்யாவுக்கு ஏன் சிஎம் ஆசை? - என்ஜிகே விமர்சனம்

by Mari S, May 31, 2019, 10:15 AM IST
Share Tweet Whatsapp

ஒன்றரை வருஷத்துக்கு அப்புறம் சூர்யாவோட படம் ரிலீஸ் ஆகறதால சூர்யா ஃபேன்ஸ்லாம் ஓவர் எக்ஸ்பெக்டோட என்ஜிகே படத்துக்கு வந்திருந்தாங்க.. சூர்யா – செல்வராகவன் படம் அதுவும் யூ சர்டிபிகேட் படம் வேற மாதிரி இருக்கும்னு.. பார்த்தா.. படம் வேற மாதிரி மொக்கையா ஆயிடுச்சு..

முதல்வன், கோ படமெல்லாம், அரசியல் படத்துக்கான ஸ்க்ரிப்ட் ஒர்க், ஸ்க்ரீன் ப்ளேன்னு எல்லா இடத்துலயும் ஸ்கோர் பண்ணிருப்பாங்க.. கடைசியா வந்த எல்கேஜி படத்துல கூட அரசியல்வாதிங்க பண்றத காமெடியாகவும், வைரல் வீடியோ, கார்ப்பரேட் அரசியல்னு எல்லா விஷயத்தையும் அழகா தெளிவா சொல்லி நல்ல ஒரு ஸ்க்ரீன் பிளே கிளைமேக்ஸ்னு வச்சிருப்பாங்க..

ஆனா, இந்த படத்துல ப்ரியா ஆனந்த் மாதிரி ஒரு கேரக்டர்ல ரகுல் ப்ரீத் சிங்க போட்டு, அவங்களுக்கு எந்த வேலையும் இல்லாம சூர்யாவுக்கு செகண்ட் சேனல் ஆக்கி அவங்களோட கதாபாத்திரத்த ரொம்ப மட்டமா டிசைன் பண்ணிருக்காரு செல்வரகாவன்.

புதுப்பேட்டை படத்துல சாதாரண ரவுடி எப்படி பிரபல ரவுடியாகவும், அரசியல்வாதியாகவும் ஆகுறாங்கறத ஆழமா அழுத்தமா எடுத்த செல்வராகன் சார்.. இந்த படத்த ஏன் இப்படி எடுத்து வச்சிருக்காருன்னு தான் புரியல.

நல்லா படிச்சுட்டு, வெளிநாட்டு வேலையை விட்டுட்டு நம்ம நாட்டுக்கு நல்லது பண்ற சிவாஜி.. சாரி சாரி ஆர்கானிக் விவசாயியா சூர்யாவ காட்றாங்க.. அவரோட மனைவியா சாய் பல்லவி அழகா நடிச்சிருக்காங்க.. ஆனா.. அவங்களையும் அங்க அங்க தனுஷ் மாடுலேஷன் பேச வச்சி, 80ஸ்ல வர படங்கள்ல ஹீரோயின் புருஷன மோந்து பார்த்து மல்லிகை பூ வாசத்தை வச்சி சந்தேகப்படுற மாதிரி, இவங்க பெர்ஃப்யூம் மோந்து பார்த்து, சூர்யா மேல சந்தேக படுற சீன்லாம்.. எப்படி ஒர்க்கவுட் ஆகும்னு நினைச்சாங்களோ தெரியல..

ஆர்கானிக் விசயாத்தை சூர்யாவ பண்ண விடாம தடுக்கறாங்க.. அப்புறம் அவர கொஞ்சம் கொஞ்சமா அரசியல்ல தள்ளுறாங்க.. பால சிங், சூர்யாவுக்கு அந்த ஏரியாவுல இருக்க மாஸ பார்த்து, அவர பிளான் பண்ணி அரசியல் சேர்க்குறமாதிரி ஆரம்பத்துல காட்டுறாங்க.. ஆனா.. அப்புறம் அதுல எந்தவொரு ட்விஸ்ட்டும் இல்லாம சப்புன்னு முடிச்சுடுறாங்க..

நல்லவரா இருக்க சூர்யா, அரசியல் சாக்கடைய சுத்தம் பண்ணுவாருன்னு பார்த்தா.. அவரே அந்த அரசியல் சாக்கடையில ஊறிப் போயிடுறாரு.. நீ நல்லவனா கெட்டவனான்னு கடைசி வரைக்கும் தெரியாம படத்தை முடிச்சுடுறாங்க..

தமிழ்நாடு சிஎம் ஆ நடிச்சிருக்க தேவராஜ், எதிர்கட்சி தலைவரா நடிச்சிருக்க பொன்வண்ணன் அவங்க வர சீன்லாம் ரொம்ப பழைய அரசியல்வாதிங்கள மனசுல வச்சி எழுதியிருக்கமாதிரி தெரியுது.. ஆனா, எதுவுமே கொஞ்சம் கூட சுவாரஸ்யம் இல்லாம இருக்குறது படத்துக்கு மிகப்பெரிய மைனஸ்.

யுவன் சங்கர் ராஜா இசையில பின்னணி இசை பிஜிஎம் நல்லாருக்கு.. ஆனா, அப்பப்போ வர பாடல்கள்லாம் எதுக்குன்னே தெரியல..

எல்லா படத்துலையும் இண்டர்வெல் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிதான் அந்த படத்துக்கு உயிர்நாடியா இருக்கும்.. ஆனா, இந்த படத்துல ரெண்டுமே செம போர்..

அதுவும் கிளைமேக்ஸ் காட்சியில எதிர்கட்சி தலைவர அவங்க கட்சிக்காரங்களே பெட்ரோல் குண்டு போட்டு எரிக்கிறதுலாம் டூமச்..

சூர்யா படம் முழுக்க சில சீன்ல வெறப்பாவும், சில சீன்ல அமாவாசை சத்யராஜ் மாதிரியும் நடிச்சிருக்காரு.. அவரு ஆக்டிங்ல குறை சொல்ல முடியலனாலும், திரைக்கதையில இருக்குற பல சொதப்பல்கள்னால.. படம் இண்டரஸ்டிங்க்கா நகரல.. இதுல ஹைலைட் என்னன்னா கிளைமேக்ஸ்ல சூர்யா சிஎம் ஆகுறதுதான்.

பாக்கலாம் சூர்யாவ காப்பானாவது காப்பாத்துமான்னு..

சினி ரேட்டிங்: 2.25/5.

Also Watch.. 


Leave a reply